25 வது பசுமைநடையின் கொண்டாட்டம் அதன் பெயர் ”விருட்சத்திருவிழா” செங்கதிரவன் இன்னும் வானில் எழும் முன் பசுமைநடை ஒருங்கினைப்பாளர்கள் சமணர்மலை அடிவாரத்தில் கூடிவிட்டனர். முன் தினம் இரவு அரங்கவேலைகள் முடிந்து இருந்தாலும், பசுமைநடை பேனரை விழா மேடை முன் கட்டும் பணிகளும், விழாவுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தம் இடம் பற்றி அறிவிப்பு அட்டைகளை கட்டி கொண்டு இருக்கும் போதே பசுமைநடை ஆர்வலர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். காலை 7.30 மணிக்குள் 300 பேருக்கும் மேல் கூடிவிட்டனர்,
காலை 9 மணிக்குள் சமணர்மலை அடிவாரம் நோக்கி கார்கள், இருசக்கரவாகனங்கள், ஆட்டோ என மக்கள் வந்து இறங்கிகொண்டே இருந்தனர். கார்களை, பைக்குகளை பார்க்கிங் பகுதியில் அவர்களாகவே நிறுத்தியது மகிழ்ச்சியை அளித்தது.
காலை 7.30 மணிக்கு வருகை தந்தவர்களின் முகவரி, தொலைபேசி விபரங்களை பாரங்கள் தந்து நிரப்பும்பணி தொடங்கிவிட்டது, தீபா நாகராணி அவர்கள் தலைமையில் கல்லூரிமாணவிகள் குழு அந்த பணியை சிறப்பாக செய்தனர், பாரம் பூர்த்திசெய்தவர்களுக்கு அவர் அவர் பெயர் எழுதி விருட்சத்திருவிழா பேட்ஜ் வழங்கப்பட்டது, குழந்தைகளுக்கு என தனிபதிவு அவர்களுக்கும் விழா பேட்ஜ் என கலந்துகொண்டவர்கள் எல்லோர் நெஞ்சிலும் விருட்சத்திருவிழா பேட்ஜ்.
காலை 9 மணி க்குள் சமணர்மலை அடிவாரம் முழுவதும் மனித தலைகள் தான், ஒவ்வொருவர் முகத்திலும் எவ்வளவு மகிழ்ச்சி, தன் வீட்டு விசேஷத்திற்கு வந்த உணர்வை அவர்கள் முகங்களில் காணமுடிந்தது, 20 0 ஆண்டுகளாக வளர்ந்து இருக்கும் ஆழமர விழுதுகளில் 24 பசுமைநடையின் போட்டோ பதிவுகள் [2அடி*1 அடி போட்டோ ] அட்டைகளில் ஒட்டி தொங்கவிடப்பட்டு இருந்தன, ஏற்கனவே பசுமைநடையில் கலந்து கொண்டவர்கள் தங்கள் முகம் தெரிகிறதா என பார்ப்பதும், வராதவர்கள் ஆர்வமாக பார்ப்பதும் தொடர்ந்தது.
முதல் பசுமைநடை பயணம் 18.9.2010 ல் தொடங்கி இன்றைய 25 வது பயணம் சுமார் 350 பேர் வுடன் காலை 9 மணிக்கு செட்டிபுடவு நோக்கி கவிஞர். P.G.சரவணன் அவர்கள் வழிநடத்தி சென்றார், ’ செட்டிபுடவு’ என அழைக்கப்படும் சமணர் குகை மலையின் தெற்கு பகுதியில் உள்ளது, சமணர் மலையை காணவருபவர்கள் மலையின் மேல் ஏறி அங்குள்ள’ பேச்சிபள்ளம் ‘ என்ற சமணசிற்பங்களை மட்டும் கண்டு செல்வர், செட்டிபுடவு குகையை பார்க்கமாட்டார்கள் பலருக்கும் தெரியாது.
செட்டிபடவு செல்லும் பாதையின் இரண்டு பக்கமும் தாமரை குளங்கள் உண்டு கடந்தமுறை பசுமைநடை வந்தபோது குளத்தில் தண்ணீர் நிரம்பி தாமரை பூ மலர்ந்து காணகத்தின் ஊடே சென்ற உணர்வைதந்தது, இந்த முறை மழை பெய்யாததால் குளம் வற்றியே காணப்பட்டது.
செட்டிபுடவு குகை செல்லும் பகுதியில் தொல்லியல்துறையினர் கற்களால் படி அமைத்து உள்ளதால் சிரமம் இல்லாமல் ஏறமுடிந்தது, குகை வாசலில் உள்ள மிகபெரிய பாறையில் ”மகாவீரர் ” உருவம் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது, அவ்வளவு உயரத்தில் இவ்வளவு அழகான சிலையா என வந்தவர்கள் வியந்துபோயினர், குகை வாயிலில் அமர்வதற்கு இடம் உள்ளது அந்த பகுதியில் பார்வையாளர்கள் அமர அந்த இடங்களின் சிறப்புகளை வரலாற்று பேராசிரியர், திரு.கண்ணன் அவர்களும், பேராசிரியர்.திரு. சாந்தலிங்கம் ஐயா அவர்களும் விளக்கினார்கள். தமிழகத்தில் காணப்படும் மகாவீரர் சிலைகளில் இங்குள்ள “மகாவீரர்” சிலையே மிகபெரியது என அறிந்துகொள்ளமுடிந்தது.
மிகபெரிய மகாவீரர் சிலை |
வந்தவர்கள் செட்டிபுடவு குகையை கண்டபின் ஆழமரவிழா அரங்கம் நோக்கி திரும்பினோம். அங்கு காலை உணவு வழங்கப்பட்டது, சர்க்கரை பொங்கல் ,வெண்பொங்கல், சட்னி,சாம்பார் என ருசியான உணவு வழங்கினர்.
காலை உணவுக்கு பின், 10.00 மணிக்கு விருட்சத்திருவிழா ஆரம்பம் ஆனது, பச்சை கம்பளவிரிப்புகளில் பார்வையாளர்கள் அமர, இலக்கியவாதிகளால் தொ.ப என செல்லமாக அழைக்கப்படும், பண்பாட்டு.ஆய்வாளர்,திரு,தொ.பரமசிவம் அவர்கள் முதல் மனிதராக வந்து அமர்ந்தார். வேட்டி சட்டையில் பார்க்க கிராமத்தான் போலவே காட்சியளிப்பார், முதன் முறையாக பார்ப்பவர்கள் அவர் பேராசிரியர் என்பதை ஒத்துகொள்ளமாட்டார்கள், அவ்வளவு எளிமை. ஆனால் அவரது பேச்சை கேட்டால் அவர்மீது காதல் கொள்வார்கள்,
சித்திரவீதிகாரன் சுந்தர் வலைபதிவில் அழகர்மலை பற்றிய கட்டுரை படித்தபின் தான் தொ.பா வை பற்றியும் அவர் அவரது நூலை படிக்கவேண்டும் என ஆவல் கொண்டேன்.
பசுமைநடையின் வெளியீடான “ மதுர வரலாறு” புத்தகத்தை தொ.பரமசிவம் ஐயா வெளியிட முதல் பிரிதியை பெறபோவது யார் என்பதை ஆவலுடன் பார்வையாளர்கள் காத்திருக்க அ.முத்துகிருஷ்ணன் அவர்கள் முதல் பிரிதியை சமணர்மலை அடிவாரமே தன்வாழ்க்கை சக்கரத்தை நகர்த்திசெல்லும் வாழ்வாதாரமாக கொண்டு 15 ஆண்டுகளாக அந்த பகுதியில் பருத்திபால் விற்பனை செய்து வரும் ஜெயமணி அம்மாள் பெற்றுகொள்வதே சிறப்பாக இருக்கும் என அவர்களை அழைக்க , பார்வையாளர்களின் கைஓசை அடங்க வெகு நேரமானது....
மாநகர காவல் ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் |
நூலை வெளியீட்டு பேசிய தொ.பா ...கல்வி, உணவு, வீடு, மருந்து இவை நான்கும் சமணர் கொள்கை, உண்ணாவிரதம் என்ற நல்விரதத்தை கண்டு பிடித்தவர்கள் சமணர்களே இன்று கல்விகூடங்கள் பள்ளி கூடங்கள் என அழைப்பதற்கும் சமண பள்ளிகலே காரணம் என பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்கள், அவர்பேசும் போது அரங்கமே அமைதியாக இருந்தது, சித்திரவீதிக்காரன் சுந்தர் அவரையும், அவரதுபேச்சை மட்டுமே கேட்கும் ஓர் தியான நிலையில் அமர்ந்து இருப்பதை காணமுடிந்தது.
அடுத்து மதுரை மாநகர காவல் ஆணையாளர். திரு.V. பாலகிருஷ்ணன் அவர்கள் பேசினார்கள், அவரது உரை அனைவரையும் கவர்ந்தது. காக்கி சட்டைக்குள் ஓர் இலக்கியவாதியை காணமுடிந்தது. விருட்சத்திருவிழா அழைப்பிதழுக்கு ஓர் புது அர்த்தத்தை தந்தார், காக்கி நிறம் பொதுவாக காவலை குறிக்கும் , பச்சை நிறம் இயற்கையை குறிக்கும் எனவே இந்த பசுமைநடை இயற்கையை காக்கும் மாபெரும் இயக்கமாக மாறவேண்டும் என வாழ்த்தினார்கள், நேரம்கிடைத்தால் பசுமைநடையில் கலந்துகொள்வதாக கூறினார்கள்.
கீழக்குயில்குடி ஊராட்சி மன்ற தலைவர் அய்யா.தங்கராசு அவர்களின் வெள்ளந்திரியான பேச்சு கூடியிருந்தவர்களை கவர்ந்தது, தெரியாததை தெரியாது என சொல்லும் அசல் கிராமத்தான் பேச்சு, செட்டிபுடவில் உள்ள சிலையை , புத்தர்சிலை என்றே இதுவரை எங்கள் கிராமத்தினர் கருதினர் இன்றுதான் அது ‘மகாவீரர்” சிலை என்றும், அந்தகுகையின் உண்மை வரலாற்றையும் தெரிந்துகொண்டோம்.என்றார், பசுமைநடையின் காரணத்தை தேவையை புரிந்துகொள்ளமுடிந்தது.
அதன்பின் பேரா. சுந்தரகாளி, பேரா.இ.முத்தையா, எழுத்தாளர். குட்டிரேவதி, கவின்மலர், தொலைகாட்சி தொகுப்பாளர்.சுகிதா மற்றும் சமணர்.ஆனந்தராஜ் போன்றவர்கள் இயற்கை ஏன் காக்கபடவேண்டும்,ப்சுமைநடைஅமைப்பு தேவை என்பதையும் எடுத்துரைத்தனர்.
கவிஞர்.ஷாஜஹான் அவர்கள் கூட்டத்தை நேர்த்தியாக வழிநடத்திசென்றார்.
1 மணிக்கு கூட்டம் நிறைவுபெற்றது, அதுவரை பங்குபெற்றவர்கள் எழுந்துசெல்லவில்லை, அவ்வளவு மகிழ்வுடன், நெகிழ்வுடன் பங்குபெற்றதை அவர்கள் முகத்தில் காணமுடிந்தது. சுவையான மதிய உணவு வழங்கியபின் விருட்சத்திருவிழா நிறைவுபெற்றது.
பசுமைநடை பங்கேற்பாளர்களின் குழந்தைகளுக்கு என தனியாக ஓர் முகாம் நடைபெற்றது. அதில் 168 குழந்தைகள் பங்கேற்றனர், அதில் கலந்துகொண்ட குழந்தைகள் வாழ்நாளில் இது போன்ற முகாமில் கலந்துயிருக்கமாட்டார்கள். அவ்வளவு மகிழ்வை பெற்றனர். விழா முடிவில் அணைத்துகுழந்தைகளுக்கும் பரிசுகள் தரபட்டது.
பசுமைநடை விழாவில் நான் கண்ட ஆச்சரியங்கள்
விருட்சத்திருவிழா ஆழமரத்தடியில் ஓர் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது, அந்த விழாவில் கலந்துகொணடவர்களை தவிர்த்து, விடுமுறைக்கு மலை அடிவாரகோவிலுக்கு வந்தவர்கள் இருந்தனர், மலையின் பக்கத்து கிராமத்தின் இளைஞர்களுக்கு அந்த மலை அடிவாரம் தான் விளையாட்டு மைதானம், எனினும் ஒரு சிறு சச்சரவு கூட ஏற்படவில்லை.
தேநீர் இடைவெளியில் வழங்கப்பட்ட தேநீர் ஏதோ கடமைக்கு தந்ததுபோல் இல்லாமல், பெரிய கனமான பேப்பர் டம்பளரில் அதிகமான அளவில் தேநீர் சுவையுடன் சமோசாவுடன் வழங்கப்பட்டது, சுமார் 600 நபர்களுக்கு தேநீர் வழங்கிய போதும் நான் நீ என முந்தாமல் அமைதியாக தேநீர் வாக்கிசென்றது, பங்கேற்பாளர்களின் பண்பை உயர்த்திகாட்டியது
விழாவில் வெளியிடப்பட்ட “மதுர வரலாறு” புத்தகம் சலுகைவிலையில் தரபட்டது ஓர் ஆச்சரியம் எனில், 400 பிரிதிகள் 10 நிமிடத்தில் விற்பனை ஆனது.
விழா திறந்த வெளி அரங்கமாக நடந்ததால் பெண்களுக்கு பாதுகாப்பு கருதி நடமாடும் கழிப்பறை வாகனம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது, விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு அது பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியது, பெரிய கட்சி மாநாட்டில் கூட இந்த வசதியை ஏற்படுத்தி தந்து இருக்கமாட்டார்கள்.
மதிய உணவு சுமார் 750 பேருக்கு வழங்கப்பட்டது, பக்கத்து கிராம மக்கள் சிலரும் சாப்பிடவந்துவிட்டனர், எனினும் வந்த அணைவருக்கும் உணவு வழங்கப்பட்டது, சிலர் உணவின் சுவை கருதி மீண்டிம் கேட்டபோதும் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதை பார்க்கமுடிந்தது, நெல்லிக்காய் ஊறுகாய், அப்பளம், மோர்வத்தல், கத்தரி கூட்டு என சாம்பார் சாதம், தயிர் சாதம், சுவையுடன் இருந்தது என பாராட்டி சென்றனர்.
சாப்பிட்ட உணவு தட்டுக்கள் அங்கு அங்கு போடாமல் ,குப்பை தொட்டி வாகனம் மூன்று நிறுத்தி குப்பை நிறைந்தவுடன் வேறு இடத்தில் போய் கொட்டிவர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
விழா முடிந்தபின்னர் அங்கு தவறுதலாக விட்டு சென்ற பேப்பர், டீ கப்புகளை ஓர் பையில் சேகரித்து குப்பைதொட்டியில் போட்டு அந்த இடத்தை சுத்தமாக ஒப்படைத்தனர், விழா முடிந்து சென்றபோது ஆழமரத்தடியில் விழா நடைபெற்றதா என சந்தேகம் எழும்படி அந்த இடம் சுத்தமாக இருந்தது.
ஒவ்வொரு பசுமைநடையும் எனக்கு புதிய அனுபவங்களை என்னுள் விதைத்தது, புதிய நல்ல நண்பர்களை இனம் காட்டியது, ... இந்த 25 பசுமைநடைவிழா என் மனதில் விதைத்த ஆனந்தத்தை விருட்சகமாக்கியுள்ளது. அதன் அடி வேராக உள்ள நண்பர்களிடம் ஓர் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலதொழிற்சங்க மாநாட்டில் கலந்து இருக்கிறேன், அங்கு விழா ஒருங்கினைப்பாளர்களுக்குள் ஒரு பெரிய இடைவெளி இருக்கும், ஆனால் இங்கு விழா குழுவினர்களுக்குள் சகோதரதன்மையை காணமுடிந்தது. அதில் நானும் ஓர் சகோதரன் என்ற மனநிறைவை இந்தவிழா எனக்கு தந்தது.
இதற்கு தொடர்புடைய நண்பர்களின் பதிவுகள்
மதுரக்காரன்
தமிழ் மணி
ஷாஜஹான்
பண்பு திருவிழா...
பதிலளிநீக்குதொகுத்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
பாராட்டுக்கள்...
மிக்க நன்றி தனபாலன் சார்,
பதிலளிநீக்குநேர்த்தியான பதிவு... மீண்டும் விழாவிற்குள் சென்று வந்த உணர்வு...
பதிலளிநீக்குஉதயகுமாருக்கு நன்றி
பதிலளிநீக்குநல்ல பதிவு.ஒவ்வொரு விசயமும் தெளிவாக பதிவு செய்யப்பட்டு்ள்ளது
பதிலளிநீக்குவணக்கம்...
பதிலளிநீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...
திண்டுக்கல் தனபாலன் சார் அவர்களுக்கு வணக்கம், வலைசரத்தில் என் நெடுஞ்சாலை பயணம் செய்தமைக்கு நன்றி
பதிலளிநீக்கு