ஞாயிறு, ஜூன் 30, 2013

சைவ உணவா,அசைவ உணவா எது சிறந்தது.



        சைவ உணவு, அசைவ உணவு எது சிறந்த உணவு என விவாதங்களும் , ஆய்வுகளும் உலகம் முழுவதும் நடைபெற்றுகொண்டுதான் உள்ளது. இருவரும் தம் உணவே சிறந்தது என உதாரணங்களை வெளியிடும் போது மக்கள் எது சிறந்த உணவாக எடுத்துகொள்ளவது என சிரமம்தான்.
 
         ஒவ்வொரு உயிர்களின் பற்கள் மற்றும் நகங்களை வைத்தே அதற்கு சைவ உணவு ஏற்றதா, அசைவு உணவு ஏற்றதா என் கண்டுபிடித்துவிடலாம்.
         சைவ உணவு உண்ணும் உயிர்களின் நகங்கள் , கூர்மை தன்னையில்லாமல் சப்பட்டையாக இருக்கும், யானை, மாடு,மான் போன்ற விலங்குகளுக்கு, நகங்கள் அகலமாக பட்டையாக இருக்கும், பற்கள் ஒழுங்கான அமைப்பில் சமமாக இருக்கும்.      
 
          அசைவ உணவு உன்ணும் உயிர்களின் நகங்கள் கூர்மையாகவும், பற்கள் ஒழுங்கற்றமுறையில் இருக்கும் உதாரணமாக புலி, நரி, கழுகு.
     
        இதன் மூலம் மனிதன் சைவ உணவிற்கு ஏற்றதன்மை உள்ளவன் என்பது தெரியவரும்.
   மனிதனுக்கு தேவையான கொழுப்பு சத்துக்கள்,மற்றும் அதிக வைட்டமின் சத்துக்கள் அசைவ உணவில் தான் உண்டு என வாதிடுபவர்கள் உண்டு.
   மனிதனுக்கு தேவைப்படும் கொழுப்பு சத்துக்கள் தாவர உணவிலும், அந்த உணவுடன் சேர்த்து பயன்படுத்தும் நெய், எண்ணை போன்றவையில் உண்டு.

   சைவ உணவு உண்ணும், உயிர்களான மாடு, மான், ஆடு போன்றவை தம் உணவுகளை தேடி சாப்பிடும் போது அதிக சக்திகளை செலவு செய்வதில்லை.
  அசைவ உணவு சாப்பிடும் உயிர்கள்  உணவுகளுக்காக அதிக சக்திகளை உடலில் இருந்து செலவு செய்து தான் உணவுகளை தேடி சாப்பிடுட வேண்டியுள்ளது.{வேட்டையாடி உணவு உண்பதால்} எனவே அதற்கு ஏற்ப அதிககொழுப்பு உணவு தேவை என்பது தெரியும்.  
 
  மனிதன் நோயுற்று இருக்கும் போது மருத்துவர்கள் சைவ உணவு மட்டும் உண்ணவேண்டும் என்கிறார்கள்.சைவ உணவு மட்டுமே விரைவில் செரிமானம் அடைவதுடன் எந்த விதமான தீங்கும் ஏற்றபடாது. குறிப்பாக இருதய நோயாளிகள் அசைவ உணவை சேர்த்துகொள்ளவே கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
 
    சைவ உணவு என வரும் போது எல்லாவிதமான தாவர உணவுகளும் மனிதனுக்கு நன்மை தருபவையா என்ற கேள்வியும் நம் முன் எழும் தாவர உணவில் கூட புளி, காரம் காரம்முள்ள  உணவை தவிர்க்கப்படவேண்டும் என கூறிகின்றனர், அப்படி தவிர்க்கபட  வேண்டிய புளி, காரம்,எண்ணை போன்ற தாவர உணவுகள்தான் அசைவ உணவில் சேர்க்கப்படுகின்றன. ஏற்கனவே அசைவ உனவு தவிர்க்கப்படவேண்டிய நிலையில் தாவர உணவில் விலக்கப்படவேண்டிய புளி , காரம் சேர்த்து சமைக்க0ப்படும் அசைவ உணவு மனிதனுக்கு நன்மை பயக்குமா?

    சைவ உணவு மட்டும் உண்ணும் மாட்டு மலம் {சானம்} ஆடு, யானை மலகழிவுகள், துர்நாற்றம் வீசுவது இல்லை, மாட்டு சானம் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது எனவேதான் வீட்டு வாசலில் சானம் தெளிக்கபடுகிறது.அதே சமயம் அசைவ உணவு உண்னும் கோழி, நாய், பூனை கழிவுகள் துர்நாற்றம் வீசுகின்றன.
 காடுகளில் மனிதன் வேட்டை ஆடி வாழும் போது குகைகளில் மிருகம் போல் வாழ்ந்த மனிதன் , சைவ உணவு பயிரிட்டு அதை உண்டு வாழும் போதுதான் நதிகரையோரம், குடியிருப்பை ஏற்படுத்தி வீடுகள் அமைத்து வாழ்ந்தான்.

 எனவே சைவ உணவே சிறந்தது.


 


இந்த கட்டுரைக்கு தொடர்புடைய பதிவு;அக்னி சிறகுl

புதன், ஜூன் 26, 2013

பசுமைநடை பயணம் 23 [கிரீன்வாக் 23] கருங்காலக்குடி

 பசுமைநடைபயணம் 23 [கருங்காலக்குடி]


 ஒவ்வொருமுறையும் பசுமையைநடைபயணம் பதிய அனுபவத்தை தருகிறது,  ஏற்றகனவே சென்றுவந்ததை போல் அல்லாமல் வேறு வேறு புதிய அனுபவத்தை தருவதால் மீண்டும் மீண்டும் பசுமைநடையில் கலந்துகொள்கிறேன்.

  அதுபோல்தான் கருங்காலக்குடி பஞ்சபாண்டவர் மலை பயணம் 23.06.2013 அன்று சென்றேன்.
   வழக்கம்போல் மாட்டுதாவணியில் சந்தித்து பசுமைநடை ஆர்வலர்களுக்கு என ஏற்பாடுசெய்யப்பட்ட குகன்மெட்ரிக் பள்ளி பேருந்து, மற்றும் வேனில் கருங்காலக்குடி நோக்கி புறப்பட்டோம்.
   இந்தமுறை அதிகமான புதியஆர்வலர்கள் கலந்துகொண்டதால் காலை 7 மணிக்கு புறப்பட்டோம்,  கருங்காலக்குடி ஊரின் மையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு பஞ்சபாண்டவர் மலை நோக்கிநடந்து சென்றோம், 150 பேர் மலையை நோக்கி வரிசையாக சென்றது ஏதோ ஊர்வலம் செல்வதுபோல் இருந்தது. ஊர்மக்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள்.
 ஏதோ சினிமா சூட்டிங்கா என சிலர் கேட்டது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது, ஊருக்கு கிழக்கு பக்கம் செல்லும் பாதையில் சிறிது தூரத்தில் பஞ்சபாண்டவர்  மலை உள்ளது, செல்லும் வழியில் மலையின் அடிவாரத்தில் குடிநீருக்காக வெட்டப்பட்டு சுவர்கட்டப்பட்ட ஊரணி மனதை கொள்ளைகொண்டது.


   பஞ்சபாண்டவர் மலையும் அதனை ஒட்டிசெல்லும் பாதையும் வார்த்தையால் வர்ணிக்கமுடியாத அளவு அழகு, அந்தவழியாக வந்த ஒரு முதியதம்பந்தியர்  எங்கள் ஊருக்கு வந்ததற்க்கு நின்று நன்றி கூறினர்.
   பஞ்சபாண்டவர் மலைநுழைவாயிலில் இரண்டு பனை மரம் அன்னாந்து பார்த்துகொண்டே மலைஏறினோம், சிறிது தூரம் மலைஏறியவுடன் சிறிய சமவெளி அதில் ஓர் பெரிய ஆழமரம், அதன் அருகில் ஓர் சமணர் குகை அந்த இடம் பார்த்தபோது பார்ப்பவர்கள்  கவிஞராகிவிடுவார்கள், அங்கிருந்து ஏறிவந்தபாதையை பார்த்தபோது, அன்னாந்து பார்த்த பனை மரத்தை  இப்போது குனிந்து பார்த்த நிலை,  அங்குள்ள பாறையில் ஆர்வலர்கள் அமர  அந்தமலையின் பெருமைகளையும் அங்குள்ள சமணர் படுக்கை மற்றும் சிற்பங்களை பற்றியும் முனைவர்.சாந்தலிங்கம் அய்யா அவர்கள் கூறினார்கள்.

     பாண்டிய நாட்டுக்கும் தலைநகரையும்,, சோழநாட்டு தலைநகரையும் இணைக்கும்  பெருவழிபாதையில் அமைந்த ஊர் கருங்காலக்குடி, இந்த மலையில் உள்ள கல்வெட்டுக்கல் கி.பி.10ம் நூற்றாண்டை சேர்ந்தவை, மதுரையை சுற்றியுள்ள மற்ற சமணர் மலைகளில் மகாவீரர் சிலை செதுக்கப்பட்டுள்ளது எனில் இங்கு சமணதுறவியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
     இந்த மலையின் குகைகளில் தொல்பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான  அடையாளமாக பல ஓவியங்கள் அந்த குகையில் காணப்படுகிறது.
     தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை  இந்த மலையை வரலாற்று சின்னமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. எனினும் பாதுகாப்புயற்ற நிலைதான் காணப்படுகிறது, இது போன்ற பகுதியில் தனிகுடும்பமாக வந்து கண்டுகளிக்க முடியாதநிலை ஏன் எனில் பாதுகாவலர்கள் யாரும்மில்லை, மக்கள் தொடர்ந்து  இது போன்ற பகுதிகளுக்கு  வந்து செல்லும் போதுதான் அரசின் கவனத்திற்கு வந்து அரசு பாதுகாப்புஏற்பாடுகளை செய்யும், அரசும் விடுமுறைகாலங்களில் பேருந்து வசதிகளை செய்து தந்தால் மக்களும் இது போன்ற இடங்களுக்கு வந்து செல்வார்கள். மதுரை மக்களுக்கும் இது போன்ற இடங்களை பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு வரும்.

  பசுமைநடை பற்றிய செய்திகள் உடனுக்குடன் தினகரன், தினமலர், ஹிந்து போன்ற நாளிதழில் வருகின்றது ஆனால் மதுரையை தாண்டி அந்த செய்திகள்  மக்களை அடைவதில்லை, டி,வி போன்ற மீடியாக்கள் தான் இது போன்ற செய்தியை கொண்டுசெல்லும் போது விழிப்புனர்வு வரும்.





      கீழ்பகுதியில் உள்ள குகையில் சமணப்படுக்கைகள் உள்ளதைபோல் மலையின் மேல் பகுதியில் குகைகளில் தான் தொல் பழங்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. அங்கு செல்ல சிறிது தூரத்திற்டு பாறையில் படிகள்  செதுக்கப்பட்டுள்ளது, மலை ஏறுவதற்கு எளிதாக இருந்தாலும் அதன்பின் கிழக்குபக்கம் செல்லும் பாதை வழியாக ஓவியம் உள்ள குகையை அடைய பாதை ஆபத்தானதாகவே இருக்கிறது, கவனம் தவறினால் 100 அடி பள்ளத்தில் விழுந்து விடுவோம். பசுமைநடை ஒருங்கினப்பாளர்கள் பாதையில் நின்று ஏறுபவர்கள் சிரமப்படாது  பாதுகாப்புதந்து ஏற்றிவிட்டனர்.
       

        குகையின் கிழக்குபக்கம்  நூறுபேர் அமரும் படியாக இயற்கையிலேயே சமவெளியாக இருந்தது,  ஆர்வலர்கள் அங்கு அமர்ந்தோம். குகைஓவியங்களை பற்றி ஓவியர் பாபு விளக்கிகூறினார்கள். அதன்பின் ஒருங்கினைப்பாளர் அ.முத்துகிருஷ்ணன் இந்த பசுமை நடை சிறப்பு பற்றியும், அடுத்த பசுமைநடை எங்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என எடுத்துகூறியபின்,
         பசுமைநடை ஆர்வலர்கள் உயரத்தில் இருந்து இயற்கையின் அழகை ரசித்தவாறு இறங்கினோம். வானம் மழைபெய்வதுபோல் மேகங்கள் திரண்டு குளுமையாக இருந்தது.




       இந்தியா முழுதும் சுற்றுபயணம் செய்துவரும் புகைபடவித்தகர் திரு. சுந்தரராசன் அவர்கள் மூன்றுநான்கு பசுமைநடைக்கு பின் தன் மகளுடன் கலந்துகொண்டார்கள், அவரது மகளும் நல்லபுகைபடநிபுணர் பல பரிசுகளும் பெற்று இருக்கிறார்கள். அந்த இடங்களின் அழகியலை கேமராவில் சுட்டுக்கொண்டிருந்தார்கள். அதேபோல் சில இடைவேளைக்கு பின் நண்பர் கவிஞர்.P.G.சரவணன் அவர்களும் வந்து இருந்தார்கள், கடந்த மாதம் வடநாட்டு மலைபகுதிகளுக்கு சுற்றுலா சென்று திரும்பும் வழியில் விபத்தால் வலதுகை முறிவு ஏற்பட்டு கைகட்டு போட்ட நிலையில் பசுமைநடையில் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுமல்லாமல், இடது கையால் அந்த இடங்களின் அழகை தன் கேமராவில் திருடிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது நெகிழ்வாக இருந்தது.
    


         வளைபதிவாளர்கள் இளஞ்செழியன்(கதிர்), சுந்தர் (சித்திரைவீதிக்காரன்) ,மற்றும் உடன்பணிபுரியும் தம்பி. பாலசுப்பிரமணி இவர்களுடன் அந்த இடத்தின் அழகை பகிர்ந்துகொண்டோம். சென்னையில் இருந்து முருகராஜ் தன் நண்பர்களுடன் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளித்தது.  
          
        ஒவ்வொருமுறை கலந்துகொள்ளும் போதும் புதுபுது அனுபலங்கள், அவை பசுமைநினைவுகளாய் மனதில் பதிவு செய்து கொண்டு வீடு திரும்பினோம். 

 பசுமை நடை ஒருங்கினைப்பு குழு உறுப்பினர்கள் உதயகுமார், ரகுநாத், இளஞ்செழியன், சுந்தர், மதுமலரன், போன்ற இளைஞர்கள் அ.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து பசுமை நடை சிறப்பாக வழிநடத்திசென்றதற்கு விருதுநகர் இலக்கியா வாசகர் வட்டம் சார்பாக வாழ்த்துக்கள்.





இதற்கு தொடர்புடைய அருமையான, விரிவான பதிவை காண ;    
                                                                          இளஞ்செழியன் 
                                                சுந்தர்-சித்திரவீதிகாரன்      ,
                                                             முருகராஜ்

கிரீன்வாக் 22 பற்றிய என் முந்தைய பதிவை காண :கீழவளவு பஞ்சபாண்டவர் மலை