“பல் போனால் சொல்போச்சு” என முதுமொழி உண்டு.
பத்திரிக்கையிலும் , டிவி யிலும் உங்கள் பற்கள் வெண்மையாகவும், ஆரோக்கியமாகவும் திகழ எங்கள் பற்பசையை உபயோகிப்பீர் என் நீண்ட நெடுங்காலமாக விளம்பரம் செய்தும்,அந்த குறிப்பிட்ட பிராண்ட் பற்பசையை உபயோகிப்பவர் வீட்டில் இன்றும் பற்கள் உபாதையுடன் தான் உள்ளார்கள்.
ஆனால் பற்பசை உற்பத்தி நிறுவனங்களோ உங்கள் பேஸ்டில் உப்பு உள்ளதா? குளோரைடு உள்ளதா? என்று மாறி மாறி பது உத்தியுடன் வியாபாரத்தை மட்டும் விரிவுபடுத்தவே செய்கின்றன.
உங்கள் பூச்சிபற்களில் எங்கள் மருந்தை தடவினால் பூச்சிகள் வெளியே வந்து விழும் என கூறி விற்பனை செய்கின்றன. கண்ணுக்குத் தெரியும் அளவில் பூச்சிகளோ , புழுக்களோ பற்களில் கிடையாது பூச்சி பற்களில் சிலர் புகையிலை, பொடி வைத்துகொள்வார்கள் அதுவும் தவறான பழக்கம்.
பூச்சிகளால் குடையப்பட்ட பற்களைம், உடைந்த பற்களையும் பல் மருத்துவரிடம் காட்டி சீராக்கி கொள்ள வேண்டும். நல்ல பற்கள் நமது வாழ்நாள் முழுவதும் கேடயமாக இருந்து உடலைக் காக்கின்றன.
நாம் உண்ட உணவு நன்றாக சீரனமாக வேண்டும் எனில் உண்ணும் உணவு நன்றாக் மென்று அரைபடவேண்டும். அதற்கு பற்கள்தான் முதல் காரணம். எனவே பற்களை பாதுகாக்க நாம் முதல் கடமையாக கொல்லவேண்டும். பல் வலி வரும் முன்பே பற்களை நாம் பாதுகாத்து கொள்ளவேண்டும். சாப்பிடும் உணவை ஒரு பக்கம் மட்டும் மெல்லாமல் இரண்டு பக்கமும் மென்று வரவேண்டும், அப்போதுதான் பற்கள் இரண்டு பக்கமும் ஆடாமல் உறுதியாக இருக்கும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒரு பல் பிடுக்கபட்டால் அந்த இடத்தில் வேரு பல் பொருத்தபட வேண்டும், இல்லையெனில் பிடுங்கப்பட்ட ப்ல்லின் மேல் கீழே இறங்க வாய்ப்பு உள்ளது. உனவு அந்த இடத்தில் அரைபடாமல் போவதால் அந்த பகுதி பற்கள் ஈறுகளை விட்டு வெளியே வர அதிக வாய்ப்பு உள்ளது.
உடம்பில் யூரியா கழிவு அதிகம் இருந்தால் பற்களில் மஞ்சள் நிறம் படிந்து இருக்கும்.
ஆண்டிபயாடிக் மருந்துகள் அதிகம் சாப்பிடுவதால் பற்களில் பாதிப்பு ஏற்படும். புகையிலை, சிகரெட், வெற்றிலைபாக்கு காரணமாகவும் பற்களில் பாதிப்பு ஏற்படும். வைட்டமின் “சி” குறைபாடுகள் பற்களை பாதிக்கும்.
- பற்களின் வளர்ச்சி நிலை
* பற்களின் முதல் வளர்ச்சி கருவுண்டான 6 வது வாரத்தில் பல்லுக்கான
சிரு மரு தோன்றுகிறது.
* குழந்தை பிறந்து 6 வது மாதம் பல் முளைக்கிறது. இதுவே பால் பல் என
கூறுவார்கள். 20 வாரத்திற்குள் 20 பற்கள் வரை முளைக்கின்றன.
* பெண் குழந்தைக்கு 6 வது மாதம் முதல் பால் பல் முளைத்தால் , அந்த
குழந்தை 12 முதல் 13 வயதில் பருவம் அடைவால் , 7 வது மாதத்தில் பால்
பல் முளைத்தால் 14 முதல் 15 வயதிற்குள் பருவம் அடைவாள் என சில
மருத்துவர்கள் கூறுகின்றனர், அது பெரும்பாலும் அனுபவ உண்மையாக
இருக்கிறது.
* 6 வது வயதில் இருந்து பால் பல் விழுந்து நிலையான பற்கள்
முளைக்கின்றன
* 13 வயதிற்குள் 28 நிலையான பற்கள் முளைத்துவிடும், 22 வயதிற்குள் 32
பற்கள் தோன்றுகின்றன.
* ஒவ்வொருவருக்கும் 12 கடவாய் பற்கள் உண்டு, நிலையான பற்கள்
விழுந்தால் பின் முளைக்காது.
பற்களின் பாதுகாப்புவழிகள் பல உண்டு அதில் ஒரு சில:
பற்கள் துலக்கிய பின் , நமது கைவிரல்கொண்டு ஈறுகளை மெதுவாக அழுத்தம் தரவேண்டும் இப்படி அழுத்துவதால் ஈறுகளின் உள்ளே இருக்கும் அசுத்தம் வெளிவரவும், பற்கள் இறுகவும் வாய்ப்பு இருப்பதால் பற்கள் ஆடுவது தவிர்க்கப்படுகின்றது. இரவு படுக்கும் முன் பற்கல் முழுவதும் நல்ல தேனை தடவி சிறிதுநேரம் கழித்து வாயை கொப்பளித்தால் பல்லில் உள்ள கண்ணுக்கு தெரியாத உணவு கிருமிகள் வெளிவந்து விடும், இது பற்களுக்கு ஆரோக்கியம் தரும். தொடர்ந்து செய்துவந்தால் ஆடாத ஆரோக்கிய பற்கள் நம்மிடம் இருக்கும்.
- பல்வலி சார்ந்த குறிகளும், அதற்கு பயன்படும் ஹோமியோபதி மருந்துகள் விபரம்.
மெசிரியம் : பற்களின் அடிப்பாகத்தில் சொத்தை விழுதல், மேல்பாகம்
நன்றாக இருக்கும். நல்ல ப்ற்களில் கூட வலி இருக்கும்.
தூஜா : பற்களின் அடிப்பாகம் நன்றாக இருக்கும், மேல்பாகம்
சொத்தையாக இருக்கும்.
ஹெக்லவாலா : பல்வலி ஏற்பட்டு முகம் முழுவதும் வலி இருக்கும்,
ஈறுகளில் சிறுசிறு கொப்பளங்கள் ஏற்பட்டு வலி
ஏற்பட்டு வலி உண்டாக்கும். பல் பிடுங்கிய பின் ஏற்படும்
வலிகளுக்கு பயன்படும்.
மேக் கார்ப்: பல் முளைக்கும் காலத்தில் ஏற்படும் வலிகள்.
கிரியாசோட்டம் : பொதுவான பற்சொத்தை வலிகளுக்கு பயன்படும்,
ஸ்டாபிசாக்ரியா :கர்ப்பகாலத்தில் ஏற்படும் பல்வலிகளுக்கு அற்புதமான
மருந்து, வெதுவெதுபான நீர் பட்டால் வலி குறையும். பல்
அடிப்பாகத்தில் சீல் இருக்கும் அதனால் ஏற்படும் வலி.
இதுபோன்று குறிகளுக்கு ஏற்ப அதற்கு பயன்படும் ஹோமியோபதி மருந்துகளை தந்தால் வலிகள் குறையும்,
குறிப்பு ; வலிகள் தன்மை, வயது, இதற்கு ஏற்ப மருந்துகளின் வீரியம் மாறுபடும் எனவே ஹோமியோ மருத்துவர் ஆலோசலனைக்கு பின் மருந்துகள் எடுத்துகொள்ளவும்.
எந்த பக்க விளைவும் இல்லாத ஹோமியோபதி மருத்துவம் எடுத்துகொள்வோம் ,மனித நலம், உடல் நலம் காப்போம்.
வெளியீடு: தீபா பதிப்பகம்,சாத்தூர் |
[ மாற்றுமருத்துவ மாத இதழில் வெளியிவந்து, அதன்பின் சமீபத்தில் ”ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஹோமியோபதி ” என்ற தொகுப்பு நூலிலும் வெளிவந்த எனது கட்டுரையின் சுருக்கம்]