நான் படிக்கும் கட்டுரைகள் ,கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தால் எழுதியவருக்கு கடிதம் எழுதிப் போடுவதுதான் என வழக்கம்.
தொலைபேசியில் பேசலாம்,நாம் பேசும் போது படைப்பாளி நம் பேச்சைக்கேட்கும் நிலையில் இருக்க வேண்டும்.அவர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பது தெரியததால் நம் எண்ணங்களை அவருடன் பகிந்து கொள்ள முடியாமல் போகலாம் என்பதால் அவரது விலாசத்திற்கு கடிதம் மூலம் தொடர்பு கொள்வேன்.
பல நேரங்களில் படைப்பாளிகளிடமிருந்து கடிதம் வராது,நான் தொலை பேசி எண்னை குறிப்பிட்டு இருப்பேன்.பதிலும் வராமல் போய்விடும்.ஆனால் சிலரிடமிருந்து போன் வரும்.அப்போது மனதில் மகிழ்வு தோன்றும்.அத்துடன் இந்த அந்த போன் பேச்சுடன் சில படைப்பாளிகளின் தொடர்பு விட்டு விடும்.
ஆனால் அந்த தொடர்பு சிலரிடம் நட்பாக மலர்ந்து இணை பிரியா நட்பாகக்கூட மாறியுள்ளனர்.அப்படிபட்ட படிப்பாளிகளான இலக்கிய நண்பர்கள் சிலர் பற்றி நினைத்துப்பார்க்கிறேன்.
ர,சு நல்லபெருமாள்; இப்போது உள்ளவர்களுக்கு இவர்களைத் தெரியுமா என்பது தெரியாது.1970முதல்1985 வரை ஆனந்த விகடன் ,கல்கியில் பிரபலமான தொடர்கதைகள் எழுதிய நாவலாசிரியர்.அகிலன்,நா.பா போன்றவர்கள் எழுதும் போது அவர்களுக்கு இணையாக பேசப்பட்டவர்.
நான் சிறுவயதில் பள்ளி விடுமுறை தினங்களில் எனது பெரியம்மா வீடு போகும் போது வார இதழ்களில் வந்த கதைகளைத் தொகுத்து பைண்டிங்க செய்து வைத்திருப்பார்கள்.
அப்படி முதலில் நான்படித்த கதை “பொன்னியின் செல்வன” நாவல்.அதன் பின் அகிலன் எழுதிய “வேங்கையின் மைந்தன்” என வரலாற்று புதினங்கள் படித்து வந்த நிலையில் “திருடர்கள்” எனும் நாவலை படிக்கும் போது என்னுள் பிரமிப்பைத் தந்தது.
அப்போது எழுத்தாளர் யார் என பார்த்த போது ர.சுநல்லபெருமாள் என இருந்தது.அதன் பின் அவரது கதைகளை படிக்க எண்ணி நூலகத்தில் தேடிய போது “கல்லுக்குள் ஈரம்” படித்தேன்,
இப்படி படிக்கும் போது அவர் பாளையம் கோட்டையில் இருப்பதாக தெரிந்தது.எனவே ஒரு போஸ்ட் கார்டில் ர.சு நல்ல பெருமாள் எழுத்தாளர்,பாளையம் கோட்டை என மட்டும் விலாசம் எழுதி கடிதம் போட்டேன்.அப்போது எனக்கு வயது17,18 இருக்கும்.
1980 இல்.ஒரு வாரம் கழித்து அவரிடமிருந்து கடிதம் வந்தது.அவர் எழுதிய நூல்களை பட்டியலிட்டு அது எந்த பதிப்பக வெளியீடு என குறிப்பிட்டும் கடிதமெழுதிமைக்கு நன்றி தெரிவித்தும் கார்டு போட்டிருந்தார்.
எனக்கு மகிழ்ச்சி வெள்ளம்,யாரிடம் பேசினாலும் “கல்கியில் கதை எழுதுபவரிடமிருந்து கடிதம் வந்துள்ளது” என பெருமையாகக் காட்டுவேன்,
ஆனால் மற்றவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லைஅதை.
ஆனால் மற்றவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லைஅதை.
அதன்பின்படிப்பு,வேலைதேடுதல்,திருமணம் எனஎன் வாழ்க்கைப்பயணம் தொடர்ந்தது.
இடையில் கண்மணி குணசேகரன் மூலம் நெல்லையில் SETC யில் வேலை பார்க்கும் இசக்கி என்கிற நண்பர் அறிமுகமானார்.
இருவரும் இலக்கியம் பற்றி பேசும் போது எழுத்தாளர் ர.சு நல்ல பெருமாள் அவர்களைப் பற்றியும்,சிறுவயதில் அவர்களுக்கு நான் கடிதம் எழுதி பதில் வந்துள்ளது என்றேன்.அவர் “ஆம்,நான் ஒரு தடவை நண்பரைப்பார்க்க பாளையங்கோட்டைபோயிருந்தபோதுரசுநல்ல பெருமாள் எழுத்தாளர்,வக்கீல் என போர்டு மாட்டிய வீட்டைப்பார்த்துள்ளேன்” என்றார்.அவரை முடிந்தால் சந்திக்கவும் எனக்கூறினேன்.
ஒரு மாதம் கடந்து இருக்கும்,நண்பர் இசக்கி அவர் வீடு சென்று என்னைப்பற்றி கூறியுள்ளார்.உடனே என்னுடன் பேச விரும்பி அவரது செல் பேசி மூலம் பேசினார்.
கடிதம்வந்துமுப்பதுஆண்டுகளுக்குப்பிறகுஎன்மனம்கவர்ந்தஎழுத்தாளரிடமிருந்துபோன்.10 நிமிடம் பேசினார்.பல விசயங்களை பேசினார்.மிக்க மகிழ்வான நாளும்,மறக்க இயலாத நாளுமாய் அது என்னுள் பதிவகியது.
அதன்பின்பத்துநாட்கள்கழித்துமீண்டும்நண்பர்இசக்கியிடமிருந்து போன்,
அதிர்ச்சியான தகவல்,ர,சு நல்ல பெருமாள் இறந்து விட்டார் என/நேரில் சந்தித்து பேசும் முன்பாகவே இறந்து விட்டார்.
அதிர்ச்சியான தகவல்,ர,சு நல்ல பெருமாள் இறந்து விட்டார் என/நேரில் சந்தித்து பேசும் முன்பாகவே இறந்து விட்டார்.
அ.முத்துக்கிருஷ்ணன்; உயிர்மை இதழ் கட்டுரைகள் மூலம் எனக்கு தொடர்பு ஏற்பட்டு க்ரீன் வாக் அமைப்பு மூலம் மேலும் நெருக்கமான தொடர்பு ஆனதால் இன்று நண்பரானார்.
மாதம்ஒரு முறை மதுரையில் சந்திக்கும் நண்பரானார். இவர் மூலம் பல படிப்பாளிகளின் அறிமுகம் கிடைத்தது.மாதம் ஒரு முறை மதுரையில் நேரில் சந்திக்கும் நண்பர் அவ்வப்போது தொலைபேசியிலும் பேசிக்கொள்ளும் நண்பர்.பேச்சைப்போலவே அவரது கட்டுரைகளும்ஆவேசம்கொண்ட கருத்துக்களை உள்ளடக்கியது.
எஸ்,அர்ஷியா; “உங்கள் நூலகம்” மாத இதழில் நீலகண்டப்பறவையை தேடி என்ற கட்டுரையை படித்தேன்.அதன் மூலம் ஏழரை பங்காளி நாவலைப்படித்தேன்.அந்த நாவலின் கதைப்பகுதி இஸ்மாயில்புரம்.
அந்தப்பகுதியில் எனது நண்பர் கதிரவன் இருந்தார்.அங்குதான் எனது இளமைப்பருவம் பல நாட்கள் கழிந்தது என்றாலும் அந்தப்பகுதியின் கதையை ,இஸ்மாயில்புரம் தோன்றிய வரலாற்றை இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.உசேன் பாதிரப்படைப்பு என்னை வெகுவாக பாதித்தது.உடன் அவருக்கு கடிதம் எழுதினேன்.உடன் அவரிடமிருந்து போன் வந்தது.பலவிசயகளை பகிர்ந்து கொண்டோம்.மதுரை வந்தால் சந்திப்போம் என்றார்.
மதுரை NCBH புத்தகக்கடையில் ஒரு நாள் சந்தித்தேன்.முதல் சந்திப்பே மறக்க முடியாத மகிழ்வான சந்திப்பு.அந்த சந்திப்பின் நினைவாக NCBHல் இரண்டு புத்தகங்கள் ரூ 400க்கு வாங்கி அன்பளிப்பாகத் தந்தார் எனக்கு
நன்றிகூறவார்த்தைகள்இல்லாமல்செய்து விட்டார்.
இலக்கியம் மட்டுமல்லாது குடும்ப விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நண்பராகி விட்டார்.என் இலக்கிய உலகின் முதன்மையான நண்பர்.
அவரது மூன்றாவது நாவல் அப்பாஸ் தோப்பு புத்தகமாக வரும் முன் படித்துப்பார்க்கும் நண்பர்களில் ஒருவராக என்னை மாற்றியுள்ளார்.இவர் மூலமும் நல்ல இலக்கிய வாதிகள் அறிமுகம் கிடைத்தது.தரமான இலக்கிய படிப்புகள்தரும்இவர்இலக்கியஉலகில் பேசப்பட வேண்டிய எழுத்தாளர்.காலம் பதில் தருமா?
அவரது மூன்றாவது நாவல் அப்பாஸ் தோப்பு புத்தகமாக வரும் முன் படித்துப்பார்க்கும் நண்பர்களில் ஒருவராக என்னை மாற்றியுள்ளார்.இவர் மூலமும் நல்ல இலக்கிய வாதிகள் அறிமுகம் கிடைத்தது.தரமான இலக்கிய படிப்புகள்தரும்இவர்இலக்கியஉலகில் பேசப்பட வேண்டிய எழுத்தாளர்.காலம் பதில் தருமா?
கண்மணி குணசேகரன்;அ.முத்துக்கிருஷ்ணன் என்னோடு பேசும் போது தங்கள் போக்குவரத்துக் கழகத்தை மையப்படுத்தி வந்துள்ள நெடுஞ்சாலை நாவலைப் படித்தீர்களா என்றார். உடன் வாங்கிப்படித்தேன். போக்குவரத்தின்
மெக்கானிக்,நடத்துனர்ஓட்டுனர்,பற்றிய கதை.அருமையான பதிவு.
அவரைதொடர்புகொண்டுபேசியபோதுஅவரும்என்னைபோலபோக்குவரத்துக்
கழத்தில் மெக்கானிக் என அறிந்த போது மேலும் நெருங்கி இன்று உடன் பிறவா தம்பி ஆகிப்போனார்.(வயது வித்தியாசம் காரணமாக)இலக்கிய நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதை என்னிடம் பகிர்ந்து கொள்வார்.
அவர் எழுதிய அஞ்சலை நாவல் படிப்பவர்கள் நிச்சயமாக கண்மணி பற்றி தெரிந்து கொள்வார்கள்.கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற அவரது படைப்புகள் பற்றிய கருத்தரங்கம் சென்று வந்தேன்.மறக்க முடியாத அனுபவங்களை தந்த நிகழ்வாய் அது.
விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா,நாஞ்சில் நாடன்,சு,வேணுகோபால் அறிமுகம் கிடைத்தது.ஒருநாள் இலக்கிய உலகில்பேசப்படும் எழுத்தாளராக வலம் வருவார்.அவரின் ஒவ்வொரு வளர்ச்சியும் எனக்கு மகிழ்வைத் தரும்.
விமலன்;விருதுநகர் அருகிலுள்ள பெரியபேராலி கிராமத்தை சேர்ந்தவர்.
சிறுகதை எழுத்தாளர், புத்தக தினத்தை முன்னிட்டு விருதுநகரில்
எஸ்ஏபெருமாள் அவர்களின் கூட்டம் நடைபெற்றது. அங்குதான் சந்தித்துப்
பேசினோம்.
“நான்மூர்த்திஅரசுத்துறையில் எனதுபணிஎனகைகுலுக்கினார்.நான் பேசுவதை அதிகம்கேட்டார்,அவர் குறைவாக பேசினார்.ஆனால் நண்பர் பாண்டியக் கண்ணன்தான் இவர் விமலன் என்கிற பெயரில் மூன்று சிறுகதை தொகுப்பு
களை போட்டுள்ளார்.என்றார்.
அடுத்த சந்திப்பில் அவரது சிறுகதை தொகுப்பு இரண்டு புத்தகம் தந்தார்.ஒன்று “காக்காசோறு,மற்றொன்று“வேர்களற்று”/
இரண்டு நூலும் சிறுகதைதொகுப்பு.எளிமையான கதைகளாக வாழ்க்கையை உணர்த்தும் கதைகள்.
எனக்கு நெடுஞ்சாலை என்ற பெயரில் வலைத்தளம் ஏற்படுத்தித் தந்து என்னை எழுததூண்டிய நண்பர்.இன்று என் எண்ணப்பதிவுகள் எழுத்துக்களாக மாறியுள்ளதற்கு காரணமானவர்.
தினசரிபோனில்பேசும்நண்பர்இவர்சிட்டுக்குருவிஎன்ற பெயரில் வலைத்தளம் ஒன்றை நடத்தி வருகிறார்.வாரம் இருமுறை அல்லது ஒருமுறை என கதை,கட்டுரைகள் எழுதி பதிவு செய்யும் நல்ல மனிதர்.எளிமையான நண்பர்.இவர் மூலம் விருதுநகரில் இலக்கிய ஆர்வலர்கள் அறிமுகம் கிடைத்தது.
இவர்களைத்தவிர பலஇலக்கியவாதிகள் குறிப்பாக திருமங்கலம் ஷாஜகான்,
மீரான்மைதீன்,பாண்டியக்கண்ணன் குறிப்பிடத்தக்கவர்கள் நான் பேச
மறந்தாலும் அவர்களாக தொலை பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கும் இலக்கிய படைப்பாளிகள்.
மறந்தாலும் அவர்களாக தொலை பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கும் இலக்கிய படைப்பாளிகள்.
எஸ்.ராமகிருஷ்ணன்,கோவில்பட்டிஉதயசங்கர் இவர்களுடன் அவ்வப்போது உரையாட அனுமதிக்கும் வாசகனாய் வலம் வருகிறேன்.
எனது இலக்கியத்தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இலக்கிய நண்பர்களும் ளர்ந்துகொண்டேஇருக்கிறார்கள்.வட்டம்பெரிதாகும்,வட்டத்தில் வரும் நண்பர்களைப்பற்றி பிரிதொரு சந்திப்பில்,,,,,,/