ஞாயிறு, ஜூலை 14, 2013

ஆஸ்துமா நோய் குணமாக ஹோமியோபதி மருத்துவம்

          

ஆஸ்துமா என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லாகும். மருத்துவத்தில் மிகப் பெரும்பாலான உடல் நோய்களுக் கான சொற்கள் கிரேக்க மொழி சொற்களாகும். ஆஸ்துமா எனும் கிரேக்கச் சொல்லுக்கு மூச்சிரைப்பு, மூச்சு வாங்குதல் என்று பெயர்.
நுரையீரல் மூச்சு குழல்கள் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளே ஆஸ்துமாவை உண்டாக்குகிறது. மூச்சுக் குழல்கள் சளியால் அடைப்போ, சினியா எனப்படும் சவ்வில் ஏற்படும் அழற்சி யினாலோ ஆஸ்துமா ஏற்படலாம். ஆஸ்துமாவில் பலவகைகள் உண்டு.
அதில் முக்கியமானவைகள்:
1. காற்றுக் குழல் ஆஸ்துமா ((Bronchial Asthma)
மூச்சுக் குழாயின் அளவு குறுகி விடுவதால், சளி அடைப்பு ஏற்பட்டு, மூச்சு இரைபப்பு உண்டாகும்.
2. இருதய ஆஸ்துமா ((Cardiac Asthma):
இருதயத்தின் இடது வென்டி ரிக்கிள் குறைபாடுகள் காரணமாக தோன்றுகிறது.
3. வெளி ஆஸ்துமா (External Asthma):
தூசி, புகை, வாசனை திரவியங்கள், இரசாயனங்கள் போன்ற வைகள் காரணமாக அழற்சி ஏற்பட்டு தோன்றும் மூச்சிரைப்பு.
4.உள் ஆஸ்துமா (Internal Asthma):
கோபத்தை அடக்குதல், பயம், உடலுறவுக்குப் பின் மூச்சிரைப்பு, தன் குடும்பத்தினரிடம், விருப்பமானவர் களிடம் தவறுகளை சுட்டிக் காட்ட முடியாமல் அடக்கி வைப்பது, மாணவர்கள் ஆசிரியர்களைக் கண்டு பயப்படுதல், சில மருமகள் கள் மாமியாருடன் இருக்கும் போது ஏற்படும் மன பயம், அல்லது மாமியாருக்கு மருமகளைக் கண்டு பயம் என பலவித உணர்ச்சி தடுமாற்றத்தால் ஆஸ்துமா வருவதுண்டு. மேலும் பரம்பரைத் தன்மை யினாலும் ஆஸ்துமா தோன்றும்.
ஆஸ்துமாவிற்கு அலோபதியில் ஒரே மாதிரி மருத்துவம் செய்வர். ஹோமி யோபதி மருத்துவத்தில் முழுமை யாக நோயாளரை ஆய்வு செய்து சிகிச்சை அளிக்கப் படுகிறது. உதாரணமாக ஒரு சிலர் மூச்சை உள் இழுக்கவும், மற்றும் வெளியே விடவும் கஷ்டப்படுவர். வேறு சிலருக்கு மூச்சை உள் இழுப்பதில் சிரமம் இருக்காது ஆனால் வெளி விடும் போது மிகுந்த சிரமப் படுவர். சிலருக்கு வெளி விடுவதில் சிரமம் இருக்காது,லி மூச்சை உள் இழுக்கும் போதுதான் சிரமப் படுவர். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு ஹோமியோபதியில் சிகிச்சை அளிக்கப் படுகிறது.
இருதயத்தில் இருந்து மற்ற உறுப்புகளுக்கு சுத்தப் படுத்தப்பட்ட இரத்தம் தமனி மூலம் செல்கின்றது. ஆனால் நுரையீரலுக்கு மட்டுமே தமனி மூலம் அசுத்த இரத்தம் வருகிறது. நுரையீரலுக்கு வரும் அசுத்த இரத்தத்தி லுள்ள கரியமில வாயு வெளியேறி சுத்தமான பிராணவாயு பெற்று சிரை வழியாக சுத்தமான இரத்தம் இருதயத்தின் வலது வென்டிரிக்கிளுக்கு செல்கிறது. எனவே மூச்சு உள் இழுக்கும் போது செலவிடப்படும் சக்தியை விட மூச்சை வெளி விட நுரையீரல் அதிக சக்தியை செலவிடுகின்றது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு உணவு கட்டுபாடு தேவை. ஆஸ்துமா நோயாளி களுக்கு சீரணமண்டலத்தில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மிக குறைவாக சுரக்கின்றது. எனவே சீரணத்தன்மை பாதிப்பு ஏற்படுவதால் அதிக உணவு உண்பதால் சீரணமாகாது. வாந்தி மற்றும் வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
பொதுவாக இரவு நேரங்களில் சீரணமண்டல செயல்கள் மிகவும் குறைவாக இருக்கும். ஆஸ்துமா நோயாளி கள் இரவு நேரங்களில் எளிதில் சீரணமாகக் கூடிய எளிய உணவுகளை, குறைவாகவே உண்ணவேண்டும். குறிப்பாக தயிர், மோர் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இவை மூச்சுக் குழாய்களில் பாதிப்புகளை உருவாக்கும். உடல் நலம் உள்ளவர்களுக்கு பழங்கள் ஊட்டச் சத்து மிக்கவை. ஆனால் ஆஸ்துமா நோயாளி களுக்கு செரிமானத் தன்மை குறைவு என்பதால், இவர்கள் பழங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமா நோயாளிகளின் தனித் தன்மை களுக்கேற்ப ஹோமியோபதி மருந்துகள் தேர்வு செய்து கொடுக்கும் போது நோயின் தீவிர தன்மை குறைவ தோடு, பின் விளைவுகள் சிறிதும் இல்லாமல் முற்றிலும் குணமாகும் வாய்ப்புகள் அதிகம்.

Moving picture breathing lungs animated gif
ஆஸ்துமா நோய் குறிகளுக்களுக் கான ஹோமியோபதி மருந்துகள் சில:
ஆண்டிமோனியம் டார்ட்:
சளி நிறைந்து, கலகல ஓசையுடன் மூச்சு வாங்குதல். குழந்தைகள் மற்றும் முதியோர் களுக்கு ஏற்றது.
ஆர்சனிக் ஆல்பம்:
நடு இரவில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு எழுந்து உட்கார்ந்து கொள்வார். முன் பக்கம் சாய்ந்து உட் கார்ந்தால் அமைதி ஏற்படும்.
புரோமியம்: மூச்சை உள் இழுக்க கடினம். வெளிவிட எளிதாக இருக்கும்.
குரோட்டன் டிக்: ஆஸ்துமாவுடன் இருமல், மார்பை விரிக்க இயலாமை, படுத்தால் இருமல் அதிகமாகும்.
மெடோரினம்:
மூச்சை உள் இழுக்க எளிமை. வெளிவிட சிரமம். காலை 2 - 4 மணிக்கு உபாதைகள் அதிகமாகும்.
அரலியா ரெசிமோசா:
கோடையில் அதிகமாகும் ஆஸ்துமா. படுத்தால் இருமல் அதிகம். சளி உப்பு கரிக்கும் தன்மை. இரவில் தூங்க முடியாது. மூச்சு உள்ளிழுக்க சிரமம்.
அர்ஜன்டம் நைட்ரிகம்:
மாடிப்படி ஏறினால் ஆஸ்துமா அதிகரிக்கும்
பாரிடா கார்ப்:
வயதானவர்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா. கலகல சப்தத்துடன் சுவாசித்தல். குளிர் - மழை காலத்தில் உபாதைகள் அதிகமாக இருக்கும்.
இன்னும் பல ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. குறிகளின் தன்மைக்கேற்ப மருந்துகள் மற்றும் வீரியங்கள் மாறுபடும். எனவே ஹோமியோபதி மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக் கொள்வது நலம்.
  symbole-0108.gif from 123gifs.eu Download & Greeting Card 
-ஹோமியோ முரசு மாத இதழில் வெளிவந்த எனது மருத்துவ கட்டுரை......

10 கருத்துகள்:

 1. விரிவான விளக்கங்கள் ஐயா... நன்றி...

  நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. தனபாலன் சார் தங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 3. 11 வருட காலமாக எனது தங்கைக்கு ஆஸ்துமா உள்ளது.வயது 21. இப்போதெல்லாம் மிகவும் கஸ்டப்படுகிறாள். இந்த ஆஸ்துமா ஐ எப்படி இல்லாமல் செய்வது? தயவு செய்து உதவுங்கள்..

  பதிலளிநீக்கு
 4. 11 வருட காலமாக எனது தங்கைக்கு ஆஸ்துமா உள்ளது.வயது 21. இப்போதெல்லாம் மிகவும் கஸ்டப்படுகிறாள். இந்த ஆஸ்துமா ஐ எப்படி இல்லாமல் செய்வது? தயவு செய்து உதவுங்கள்..

  பதிலளிநீக்கு
 5. எனக்கு படுத்தால் மூச்சு விட சிரமம் உள்ளது

  பதிலளிநீக்கு