சைவ உணவு, அசைவ உணவு எது சிறந்த உணவு என விவாதங்களும் , ஆய்வுகளும் உலகம் முழுவதும் நடைபெற்றுகொண்டுதான் உள்ளது. இருவரும் தம் உணவே சிறந்தது என உதாரணங்களை வெளியிடும் போது மக்கள் எது சிறந்த உணவாக எடுத்துகொள்ளவது என சிரமம்தான்.
ஒவ்வொரு உயிர்களின் பற்கள் மற்றும் நகங்களை வைத்தே அதற்கு சைவ உணவு ஏற்றதா, அசைவு உணவு ஏற்றதா என் கண்டுபிடித்துவிடலாம்.
சைவ உணவு உண்ணும் உயிர்களின் நகங்கள் , கூர்மை தன்னையில்லாமல் சப்பட்டையாக இருக்கும், யானை, மாடு,மான் போன்ற விலங்குகளுக்கு, நகங்கள் அகலமாக பட்டையாக இருக்கும், பற்கள் ஒழுங்கான அமைப்பில் சமமாக இருக்கும்.
அசைவ உணவு உன்ணும் உயிர்களின் நகங்கள் கூர்மையாகவும், பற்கள் ஒழுங்கற்றமுறையில் இருக்கும் உதாரணமாக புலி, நரி, கழுகு.
இதன் மூலம் மனிதன் சைவ உணவிற்கு ஏற்றதன்மை உள்ளவன் என்பது தெரியவரும்.
மனிதனுக்கு தேவையான கொழுப்பு சத்துக்கள்,மற்றும் அதிக வைட்டமின் சத்துக்கள் அசைவ உணவில் தான் உண்டு என வாதிடுபவர்கள் உண்டு.
மனிதனுக்கு தேவைப்படும் கொழுப்பு சத்துக்கள் தாவர உணவிலும், அந்த உணவுடன் சேர்த்து பயன்படுத்தும் நெய், எண்ணை போன்றவையில் உண்டு.
சைவ உணவு உண்ணும், உயிர்களான மாடு, மான், ஆடு போன்றவை தம் உணவுகளை தேடி சாப்பிடும் போது அதிக சக்திகளை செலவு செய்வதில்லை.
அசைவ உணவு சாப்பிடும் உயிர்கள் உணவுகளுக்காக அதிக சக்திகளை உடலில் இருந்து செலவு செய்து தான் உணவுகளை தேடி சாப்பிடுட வேண்டியுள்ளது.{வேட்டையாடி உணவு உண்பதால்} எனவே அதற்கு ஏற்ப அதிககொழுப்பு உணவு தேவை என்பது தெரியும்.
மனிதன் நோயுற்று இருக்கும் போது மருத்துவர்கள் சைவ உணவு மட்டும் உண்ணவேண்டும் என்கிறார்கள்.சைவ உணவு மட்டுமே விரைவில் செரிமானம் அடைவதுடன் எந்த விதமான தீங்கும் ஏற்றபடாது. குறிப்பாக இருதய நோயாளிகள் அசைவ உணவை சேர்த்துகொள்ளவே கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சைவ உணவு என வரும் போது எல்லாவிதமான தாவர உணவுகளும் மனிதனுக்கு நன்மை தருபவையா என்ற கேள்வியும் நம் முன் எழும் தாவர உணவில் கூட புளி, காரம் காரம்முள்ள உணவை தவிர்க்கப்படவேண்டும் என கூறிகின்றனர், அப்படி தவிர்க்கபட வேண்டிய புளி, காரம்,எண்ணை போன்ற தாவர உணவுகள்தான் அசைவ உணவில் சேர்க்கப்படுகின்றன. ஏற்கனவே அசைவ உனவு தவிர்க்கப்படவேண்டிய நிலையில் தாவர உணவில் விலக்கப்படவேண்டிய புளி , காரம் சேர்த்து சமைக்க0ப்படும் அசைவ உணவு மனிதனுக்கு நன்மை பயக்குமா?
சைவ உணவு மட்டும் உண்ணும் மாட்டு மலம் {சானம்} ஆடு, யானை மலகழிவுகள், துர்நாற்றம் வீசுவது இல்லை, மாட்டு சானம் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது எனவேதான் வீட்டு வாசலில் சானம் தெளிக்கபடுகிறது.அதே சமயம் அசைவ உணவு உண்னும் கோழி, நாய், பூனை கழிவுகள் துர்நாற்றம் வீசுகின்றன.
காடுகளில் மனிதன் வேட்டை ஆடி வாழும் போது குகைகளில் மிருகம் போல் வாழ்ந்த மனிதன் , சைவ உணவு பயிரிட்டு அதை உண்டு வாழும் போதுதான் நதிகரையோரம், குடியிருப்பை ஏற்படுத்தி வீடுகள் அமைத்து வாழ்ந்தான்.
எனவே சைவ உணவே சிறந்தது.
இந்த கட்டுரைக்கு தொடர்புடைய பதிவு;அக்னி சிறகுl
சரியாகச் சொன்னீர்கள்...
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குDear velmurugan
பதிலளிநீக்குi to agree that vegetarian food is good, but there is a misconception that we are basically vegetarians. one simple test you eat a pure veg food like grass or any leaf without cooking and another day you eat pure non veg like meat or chicken, most probably non veg food will be digested. you can not digest veg food like a cow. initially men were pure non vegetarian (hunters) only after they developed agriculture they become vegetarians. but still it is good to have veg food.
balasubramani
மனிதன் மனித தன்மை அடைந்தற்க்கு அதாவது மிருக வாழ்வில் இருந்து மனித வாழ்விற்க்கு சிந்திக்கும் தன்மை கொண்டவனாக மாருவதற்கு அசைவ உனவே காரணம் .........மேற்க்கோள் டார்வின் பரினாம கோட்பாடு,,,மனித குரங்கிலிரிந்து மனிதனாய் மாறியதில் உழைப்பின் பாத்திரம் எங்கல்ஸ்....
பதிலளிநீக்கு