சனி, ஆகஸ்ட் 31, 2013

மதுரை பசுமை நடை 25 விருட்சத்திருவிழா [பகுதி 1]


சமணர்மலை


 பசுமைநடையின் 25 வது விழா அது விருட்சத்திருவிழா ஆகஸ்ட் 25ம் தேதி என 25வது விழா 25ம் தேதி என பொருத்தமாக அமைந்து போனது.

     இவ்விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு அந்த பசுமையான நினைவு அவர்கள்  மனதிற்குள் விருட்சகமாக வளர்ந்துகொண்டே இருக்கும், அவ்வளவு ஆனந்தத்தை உணர்ந்துள்ளனர். அதுவும் குழந்தையுடன் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு மறக்கமுடியாத திருவிழாவாக அமைந்துள்ளது.

       விருட்சத்திருவிழாவிற்க்கு விருதுநகரில் மாலை 5 மணிக்கு   பணிமுடித்து கிளம்பி 6 மணிக்கு சமணர் மலை அடிவாரத்தை அடைந்த போது  ஏற்கனவே பசுமைநடை ஒருங்கினைப்பாளர்கள் அங்கு கூடியிருந்தனர். நான் சென்ற சமயத்தில் அடுத்தநாள் உணவுக்கு தேவைபடும் பலசரக்கு சாமாண்களை மினி லாரியில் இருந்து இறக்கிகொண்டு இருந்த நண்பர்களுக்கு வணக்கத்தை போட்டுவிட்டு ,  சுந்தரராசன்  சார் ,செல்வம்ராமசாமி சார் இவர்களுடன் பேசிகொண்டு இருக்கும் போது, அ.முத்துகிருஷ்ணன் அவர்கள் முத்து குமரன், சரவணன், பாலாஜி மறத்தமிழன், ஓவியர் ரவி போன்ற நண்பர்களுடன் அங்கு வந்தார்.


வஹாப் ஷாஜஹான், சதீஸ்குமார், இளஞ்செழியன், சுந்தர்,வேல்முருகன், சுந்தரராஜன், ரவி

   எந்த இடத்தில் மேடை அமைப்பது மற்றும் சாமினா அடைப்பு எப்படி போடுவது என கலந்து ஆலோசித்துவிட்டு , அங்குள்ள டீ கடையில் டீ சாப்பிடும் போது மணி 7  இன்னும் இருட்டு முழுமையாக வராத நிலை , மலைஅடிவாரத்தில் உள்ள கருப்பனசாமி கோயிலில் மின் விளக்கு எரிய அந்த சூழலில் கோவிலையையும், சமணமலையையும், தாமரைகுளத்தையும் ஆழமரத்தின் கீழ் இருந்து பார்க்கும்போது ரம்மியமான காட்சி காட்சிகளை நண்பர்களுடன் ரசித்துகொண்டு இருக்கும் போது மழை பெய்தது, பெரிய மழையாக இல்லாமல் தூறல் போல் வந்து சென்றது விருட்சகவிழாவுக்கு வாழ்த்தை கூறுவதுபோல் அந்த இடத்தை குளிர்வித்து சென்றது.

      மழைவிட்ட சிறிது நேரத்தில் சாமியான பந்தல் காரர்கள் வர அவர்களுக்கு எங்கிருந்து ஆரம்பித்து எதுவரை அடைப்பு போடவேண்டும் என்பதை சுந்தரராசன் சார் விளக்கி கூற அவர்கள் பணி தொடங்கி 1 மணி நேரத்தில் இரண்டு ஆழமரத்தை உள் அடக்கி ஓர் உள் அரங்கம் ஏற்படுத்திவிட்டனர், அரங்கின் உள்ளே தரையில்  4500  சதுர அடியில் பச்சைகம்பளம் விரிக்கப்பட்டது, அதன்பின் அந்த அரங்கை பார்த்தபோது எங்கள் கண்ணே நம்பமுடியவில்லை இவ்வளவு அழகான அரங்கமா , ஆழமரகிளைகள் கூரையாக , சுற்றிலும் சிவப்பு திரைகள் சுவராக, பச்சைகம்பளம் அழகான தரையாக மாறிவிட்டது.
சாமியான பந்தல் அமைக்கும் முன்

பேனர் , விரிப்பு போட்ட அரங்கம்

    சமையல்காரர்கள் பாத்திரம், சேர், தண்ணீர் டிரம் என வந்துவிட்டனர், அ.முத்துகிருஷ்ணனின் தாயார் அடுத்தநாள் மதிய உணவுக்கு தயிர் ரெடி செய்ய பால் கொண்டு வந்து விட்டார்கள், பால் காய்ச்ச விறகு வேண்டுமே உடன் விறகு வாங்கிவர ‘மதுமலரன்” விரட்டப்பட்டார், அவர் மினிலாரியில் விறகு வாங்கிவர  இரவு 10 மணி ஆகிவிட்டது.
 
    நண்பர்களுக்கும் பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது, மினிலாரியில் ஏறி நாகமலைபுதுக்கோட்டை க்கு புறப்பட்டோம் , ஓர் இரவு நேர ஹோட்டலில் தோசை,இட்லி,புரோட்டா என விரும்பியதை சாப்பிட்டுவிட்டு , புறப்பட்டோம் .
 
     நாகமலையில் இருந்து கீழகுயில்குடி சமணர்மலை வரை 3 கி.மீ தூரம்  வரை 4அடி வட்ட அட்டையில் ரெடிசெய்யப்பட்ட விருட்சகவிழா பேனரை பாதையில் உள்ள கம்பங்களில் கட்டுவது அதன் மூலம் விழாவிற்கு வருபவர்களை வரவேற்பது போலவும், விழா இடத்தை வழிகாட்டுவது போலவும் இருக்கும் விழா குழுவினர் முடிவுசெய்து இருந்தனர். பேனர் கட்டும் பணியை தொடங்கும் போது அதுவரை உடன் இருந்த நண்பர்கள் வஹாப் ஷாஜஹான் , சரவணன் பிரியமனமில்லாமல் நாளை வருவதாக கூறிசென்றனர். இளஞ்செழியன், சுந்தர், உதயகுமார், கந்தவேல், ரகுநாத், சதீஷ்குமார், மதுமலரன், முருகராஜ்[சென்னை], மணிகண்டன்[சென்னை], இவர்களுடன் நானும் பேனர் கட்டும்பேனரை கட்ட ஆரம்பித்தோம்  முதல் பேனரை கட்டும்போது அந்த இடத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், ஊர்குடிகாரர்களுக்கும் அடிதடி சண்டை ,மணியோ இரவு 11  அந்த சமயத்தில் பேனரை கட்டவிடுவார்களா? என பயந்தபோது சில ஆட்டோ ஓட்டுனர்கள் தலைவா நீங்கபாட்டுக்கு கட்டுங்கள் இது தினம் நடக்கும் நிகழ்வுதான் என உற்சாகபடுத்த அங்கிருந்து 3 கி.மீ பாதையில் மின் கம்பங்களில் கட்ட ஆரம்பித்தோம்.

     பேனரை கட்டிகொண்டு வரும்போது ஒருவர்கொருவர் கேலிபேசிக்கொண்டு நடந்துவந்தது மறக்கமுடியாத அனுபவம். அந்த கூட்டத்தில் வயது அதிகமானவன் நான்தான், அவர்கள் வயதுவித்தியாசம் பார்காமல் என்னையும் கேலிபேசியது மனதுக்கு மகிழ்ச்சியை அளித்தது. நண்பர்களில் சித்திவீதிகாரன் சுந்தருக்கு வரும் 8 தேதி திருமணம் என்றாலும் திருமணவேலைகள் பார்க்காமல் விழா வேலை பார்த்தார், மலை அடிவாரத்தை அடைந்த போது மணி 12.30 அதுவரை சாப்பிடாமல் இருந்த சுந்தரராசன் சாரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நானும், இளஞ்செழியன், ரகுநாத் திருமங்கலத்திற்கு திரும்பினோம்.
   
     மற்ற நண்பர்கள் அங்கேயே இரவு தங்கிவிட்டனர்,அங்கு தங்கிய நண்பர்கள் மிகமிக பாக்கியவான்ங்கள் இனி இதுபோன்ற சந்தர்ப்பம் யாருக்கும் கிடைக்காது,




தொடரும்...............