புதன், மே 16, 2012

கிரிக்கெட் மோகம்...


ஒடி விளையாடு பாப்பா என்றும், மாலை முழுவதும் விளையாட்டு என்றும் கூறினார் பாரதியார். மாலை நேரம் விளையாட சொன்னால், நாள்முழுவதும் விளையாட்டை வேடிக்கை பார்த்து அது குறித்து பேசுவதையே இளைஞர்கள் இன்று வாடிக்கையாக்கி உள்ளனர்.சினிமாவில்மட்டுமே அநியாயத்திற்கு குரல் கொடுக்கும், போராடும் ஹீரோவை கடவுளாக எண்ணி கும்பிடுவது போல் கிரிக்கெட் விளையாடும் நபர்களை கடவுளாக நினைத்துக் கொண்டும் அவர்கள் வெற்றி பெற யாகங்கள் செய்யும் படித்த இளைஞர்கள் வருங்காலத்தை கேள்விக் குறியாக்கிவருகின்றனர். டிவியில் காண்பித்து கிராமத்து இளைஞர்களும் பாரம்பரிய கபடி விளையாட்டை மறந்து கிரிக்கெட் விளையாட்டு பக்கம் ஈர்த்துவிட்டார்கள்.
நாட்டில் முக்கிய பிரச்சனை ஏதும் வந்தால் எடுத்துக்காட்டாக பெட்ரோல்,டீசல் விலை உயர்வு, தொழிலாளர்,விவசாயிகள் போராட்டம் எதிர்கட்சிகள் வேலை நிறுத்தம் என வரும் போது உடனே கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி நடத்திவிடுவர்கள் ஆளும் கட்சியினர். பத்திரிக்கை டிவி போன்ற மீடியாக்கல் நாட்டின் முக்கிய பிரச்சனைகளை விட்டுவிட்டு கிரிக்கெட் விளையாட்டுக்கு மிக முக்கியதுவம் தரும். நூறு ரன் எடுத்தவரைப் பாராட்டி பிரதமர்,ஜனாதிபதி வரை வாழ்த்து தெரிவிப்பார்கள். நாட்டின் முக்கியமான பிரச்சனைகள் மக்களிடமும் இளைஞர்களிடமும் மறைக்கப்பட்டோ,மறக்கவைக்கப்படும்.
நாட்டின் பாதுகாப்புக்கு காவலர்கள் பற்றாகுறை இருக்கும்போது கிரிக்கெட் வீரர்களுக்கும்,கிரிக்கெட் மைதானத்திற்கும் அதிக அளவு போலீஸ்காரர்களை பணிபுரிய வைப்பது கவலையளிக்கிறது. உளுந்தம் பருப்பு,துவரம் பருப்பு, சீனி, காய்கறி என அணைத்துப் பொருட்களின் விலை உயர்ந்தாலும் கவலைப்பட இளைஞர் உலகம் தயாராக இல்லை கிரிக்கெட் போட்டி பார்ப்பதே முதல் கடமை விளையாட்டு நடைபெறும் சமயம் கரண்ட் கட்டாகாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் இளைஞர்களின் முதல் கவலை.
அரசு வேலைபார்ப்பவர்கள் வீட்டில் வேலை,அல்லது உடல்நலம் சரியில்லை என விடுப்பு எடுத்து கிரிக்கெட் போட்டியை டிவி யில் பார்க்கின்றனர். கிரிக்கெட் மேட்ச் அன்று வீட்டு வேலை செய்ய மறுக்கும் பிள்ளைகளை உருவாக்கியுள்ளது கிரிக்கெட் மோகம்.
அரசு ஊழியர்கள் வருட வருமானம் ரூ 2,00,000 பெற்றால், ரூ5000 வரி விதிக்கின்ற அரசு, ஆயிரம்கோடி ரூபாய் பணம் புரளும் IPL போட்டிக்கு வரி விலக்கு தருகிறது. விளையாட்டு வீரர்கள் சட்டையின் கையில்,முதுகில்,நெஞ்சில்,தொப்பியில்,பேண்ட் முன்பகுதி,பின்பகுதி என விளம்பரம் மூலம் பல லட்சம் பெறுகின்றனர் அதுவும் வரிவிலக்கு பெற்று. பந்து அடிக்கும் மட்டையில் விளம்பரம்,மைதானம் முழுவதும் விளம்பரம்,கிரிக்கெட் பந்தில் மட்டும் தான் விளம்பரமில்லை. மைதானத்தில் எங்கள் விளம்பரப் பலகை பந்தைஅடித்தால் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு என அறிவிப்பு செய்கின்றனர்.
கிரிக்கெட் டீம் என்பது தனியார் கிளப் அதற்கும் இந்திய அரசுக்கும் சம்மந்தம் கிடையாது. விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய ஒலிம்பிக்சங்கத்திற்கோ அல்லது மத்திய அரசுக்கோ உரிமைகிடையாது. ஆனால் மற்றநாட்டிலோ அல்லது உள்நாட்டிலொ விளையாடும் போது இந்திய அணி என இந்தியாவின் பெயரை பயன்படுத்தி கொள்கின்றனர்.
ஐரோப்பாவில் கால்பந்துக்கு என தனித் தனி கிளப் உண்டு. அவைகள் மோதும் போது கிளப் பெயரை மட்டுமே பயன்படுத்துவர். நான்கு ஆண்டுக்கு ஒருமுறை உலக கால்பந்து போட்டி நடைபெறும் போது,அந்த அந்த நாட்டு அரசுகள் சார்பாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு நாட்டின் பெயரைதாங்கி போட்டி நடைபெறும். அது போல் இந்தியாவில் பிற விளையாட்டுக்களுக்கு ஒலிம்பிக் சங்கம் சார்பாக வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், வெளிநாட்டுக்கு இந்தியா சார்பாக இந்திய அரசு செலவில் அனுப்புவார்கள். ஆனால் கிரிக்கெட்டில் அது முடியாது, இப்படி இருக்க கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி அல்லது இந்தியா தோல்வி என எப்படி கூற முடியும். கிரிக்கெட் மூலம் பத்திரிக்கைகளும் டிவிகளும் கோடிகோடியாம் சம்பாதிக்கும் போது இது பற்றி எழுதுவார்களா என்ன?
IPL கிரிக்கெட் கிளப்பில் உள்ள தலைவர்கள் மட்டும் ஊழல் செய்வது இல்லை விளையாட்டு வீரர்கள் கூட தான் விளையாடும் டீம் தோற்க லஞ்சம் பெற்று விளையாடுவதை கண்டுபடித்து நீக்கியுள்ளனர். இது தெரியாமல் கிரிக்கெட் மோகம் தலைவிரித்து ஆடுகின்றது.
(பயணம் சிற்றிதழில் வந்த எனது கட்டுரை)

6 கருத்துகள்:

 1. நான் கிரிக்கெட் பார்ப்பதேயில்லை. மற்ற விளையாட்டுகளை எல்லாம் கிரிக்கெட் அழித்து வருவதால் அது எனக்கு பிடிப்பதில்லை. தங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பகிர்விற்கு நன்றி.

  உலகப்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்கட்டும்
  http://maduraivaasagan.wordpress.com/2011/03/10/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2/

  மறைந்துவரும் விளையாட்டுகள்
  http://maduraivaasagan.wordpress.com/2011/09/06/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/

  தங்களுக்கு நேரமிருக்கும் போது என்னுடைய இந்தப் பதிவுகளையும் வாசித்துப்பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 2. சித்திரை வீதிகாரருக்கு வணக்கம், உங்கள் கருத்துக்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. சரியாக சாடி உள்ளீர்கள் - மனசாட்சிக்கு உலகத்திலேயே பிடிக்காத ஒன்னு இருக்குன்னா அது மட்டை பந்து விளையாட்டு தான்

  பதிலளிநீக்கு
 4. ரொம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க. கிரிக்கெட்டுக்கு எதிரான கருத்தை ஒரு ஆண் சொல்லி இன்றுதான் கேள்விப்படுகிறேன். எங்க வீட்டுல அப்பா, கணவர் பார்க்கும்போதே திட்டுபவள் நான். இப்போ அந்த கிரிக்கெட் சுழலில் பிள்ளையும் இறங்குவதை தடுக்க வழி தேடி கொண்டு இருக்கிறேன். நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. மனசாட்சி, ராஜி அவர்களுக்கு வணக்கம், கருத்துக்கள் வழங்கியதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. இது நாள் வரைநான் கிரிக்கெட்டை பார்த்ததில்லை,எனக்கு அது தெரியவும் தெரியாது.காரணம் அந்த விளையாட்டில் நடக்கிற பேரங்களா, அல்லது இயல்பிலேயே பார்க்கபிடிக்கவில்லையா?தெரியவில்லை.நல்ல பதிவு.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு