புதன், மே 09, 2012

கோடை மழை


       இன்று வேலைமுடிந்து டவுன்வழியாக வீடு செல்லும் போது வீட்டுக்கு இந்தமாதம் தேவைபடும் பலசரக்குகள் வாங்கி கொண்டு போக வேண்டும் இல்லையெனில் மணைவியின் அர்சனை அதிகமாகிவிடும், 8 தேதி ஆச்சு இன்னும் சாமான்வாங்கவில்லை என ஒரே புலம்பல் நானும் இன்று நாளை என தாமதமாகிவிட்டது, மாலை வேலைமுடிந்து வாங்கலாம் எனில் நண்பர்களை வரும்வழியில் பார்த்துவிடுவதும்,அவர்களுடன் எழுத்தாளர்களை பற்றியும் கதைகளை பற்றியும் நேரம்போவதே தெரியாமல் பேசுவதும் இடையில் வீட்டில் இருந்து போன் அழைப்புவந்தால் ஆபிஸில் ஒவர்டைம் என பொய் சொல்லி தப்பிப்பதுமாக போனது. ஆனால் இன்று ஆபிஸ் விட்டு கிளம்பும் நேரத்தில் வானம் கருமேகங்கள் சூழ காற்று வேகமாக வீசியது எந்த நிமிடமும் மழை பெய்யும் நிலை சரி இன்றும் சாமான்வாங்கமுடியாது போல் இருக்கே என்று எண்ணியவாரே பைக்கில் ஏறி புறப்பட லேசாக மழை தூர ஆரம்பித்தது சரி பெரிய மழை வருவதற்குள் வீடுபோய் விடுவோம் என பைபாஸ் பாதையில் வண்டியை திருப்பினேன், வேகமாக வண்டியை ஒட்டியபடி வானத்தை ரசித்தபடி வந்தேன் கோடையில் பெய்யும் மழை ஏனோ இடியும் மின்னலுமாக உள்ளது, சிறுதூரலாக இருந்தது பெரும் மழையாக மாறியது பைபாஸ் என்பதால் எங்கும் ஒதுங்க முடியவில்லை,தெப்பமாக நனைந்தேன்.
மழையில் நனைந்துகொண்டே வண்டியை ஒட்டுவது சிரமாக இருந்தாலும் ஆனந்தமாக இருந்தது, வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திய போது ஏன் இப்படி நனைந்தபடி வந்தீர்கள் என துண்டை தந்து விட்டு முனுமுனுத்தவாரே உள்ளே சென்றாள், தலையை தோட்டிக்கொண்டே இருக்கும்போது டீ யை தந்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள், இடிமின்னலுக்கு பயப்படும் மணைவியை நினைத்து சிரித்துவிட்டு வீட்டு வாசலில் உட்கார்ந்து டீயை குடித்துக்கொண்டே மழைபெய்ந்து கொண்டு இருப்பதை ரசித்தேன். பத்து நிமிடம் கடந்தது, டீ குடித்தா டம்பளரை கழுவபோடுங்க என கேட்டவாரே என் மணைவி வீட்டில் இருந்த வெளியே வரவும் மழை சுத்தமாக நின்றுவிட்டது, கோடைமழை இப்படிதான் கொஞ்ச நேரம் பெய்யும் அப்புறம் நின்றுவிடும் டவுனில் ஒதுக்கி நின்று இருந்தால் பலசரக்கை வாங்கி வந்து இருக்கலாம் என காலியான டீ டம்பளரை வாங்கிய படி வீட்டிற்குள் சென்றாள்,வானத்தை பார்த்தேன் சிலநிமிடத்திற்கு முன் இடிமின்னல் என மிரட்டிய மழை இப்போது அமைதியாக இருந்தது...

2 கருத்துகள்:

  1. நல்ல் கருத்து உருவாக்கம்,மழை எப்போது ஆனந்தம் தருவதும் ஆச்சரிய மூட்டுவதுமாய் நம்மை கடந்து போகிறது.தூறலாக,பெருமழையாக இன்னும்,இன்னுமாக் அதன் உருகாட்டி பதியனிட்டுச் செல்கிற மழை நம்மை ஆச்சரிப்படவைக்கிற ஒன்றாகவே.நல்ல் படைப்பு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி விமலன் சார்,
    கருத்துக்களும் பயன்னுள்ளதாக உள்ளது.

    பதிலளிநீக்கு