இன்று நூலகத்தில் இருந்து "காலத்தின் குரல்" கவிஞர்மீராவின்முதலாம்
ஆண்டுநினைவஞ்சலி நாளில் வெளியான நூலைபடித்தேன்.
தமிழகத்தின் முக்கிய இலக்கியவாதிகள் அவருடன் பழகிய நினைவுகளை பதிவு செய்திருந்தார்கள். நூலை படிக்கபடிக்க மீரா அவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்ளும்வாய்ப்பைபக்கத்தில்இருந்தும்தவறவிடப்பட்டுள்ளேன்.
அவரின் அன்னம் விடு தூது இதழ் வெளிவந்த போது வாங்கிபடிப்பேன், மற்றவர்கள் குமுதம்,ஆனந்தவிகடன், கல்கி வாங்கிபடிக்கும் போது நான் செம்மலர், அன்னம் விடுதூது வாங்கி எப்போதும் கையில் வைத்து திரிவேன்.
அப்போது இப்போது உள்ள குமுதம் இதழ் அளவில் 2 புத்தகம் வெளிவந்தது. அப்போது மதுரையில் போக்குவரத்துக்கழகத்தில் அப்பிரண்டிஸ் பார்த்த நேரம்.
அச்சமயம் கரிசல்காட்டு கதை வெளியிட்டார்கள்வாங்கி படித்தேன் வியந்தேன் அதன்பின்தான் கி.ராஜ்நாராயணன் எல்லோரும் அறியும் நிலை ஏற்பட்டது என எண்ணுகிறேன்.
அப்பிரண்டிஸ்முடிந்து சிவகங்கையில் 1986 ல் மருதுபாண்டியர் போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பணியாளராக சேர்ந்தேன். தினசரி மதுரையில் இருந்து சிவகங்கை சென்றுவருவேன். காலை 6.20க்கு சிவகங்கை பஸ், பலநாட்களில் அந்த நேரத்தில் எங்களுடன் மீரா அவர்களும் சிவகங்கை பயணம் செய்வார் கையில் பிரிப்கேஷ் சூட்கேஷ் வைத்து இருப்பார் சிலநேரம் இடம் கிடைக்காதபோது நான் எழுந்து இடம் தந்துள்ளேன். அப்போது புன்னகைமட்டுமே செய்வார்,
அவரது அகரம் அச்சகத்திற்கு 2முறை சென்றுள்ளேன்.நீளமான வெரன்டாவில் அவர்கள் வெளியிட்டநூல்களை பார்வைக்கு விற்பனைக்காக வைத்திருப்பார்கள், எனது கூச்ச சுபாவத்தால் மீராவை தள்ளி இருந்தே பார்த்துவியந்துள்ளைன்.
3 வருடத்தில் பணி இடம்மாறியதால் என் தடம்மாறிவிட்டது. இந்த நூலை படித்தபோது அவரின் நினைவு என்மனதில் வந்து சென்றது. அவசியம் அடுத்தமுறை காலத்தின் குரல் சொந்தமாகவாங்கவேண்டும். அவரின் கவிதைஒன்று
" என்எழுதுகோல்வெறும்எழுதுகோல்அல்ல!
தேசம்தழுவும்பொதுவுடமைக்கு
வரவேற்புரை எழுதும் பொதும்
தேகம் தழுவும்
உனக்கு என் தனியுடமைக்கு
வாழ்த்துரை எழுதும் போதும்
என் எழுது கோல் வெறும் எழுதுகோல் அல்ல
.
நூலைப் பற்றிய உங்களின் விமர்சனம் அருமை...
பதிலளிநீக்குநன்றி...
தனபாலன் அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குநல்ல நினைவாக்ககட்டுரை,வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகடைசி வரிகள்,பொது உடமைக்கு வரவேற்பு எழுதவும்,வாழ்த்துரை எழுதவும் பயன் படும் என் எழுது கோல்”சொல்லிச் சென்ற விதம் நன்று.
நன்றி விமலன் சார்
பதிலளிநீக்கு