விருதுநகர் புரோட்டா
இன்று புரோட்டா நடுத்தரமக்களின் முக்கிய உணவாக மாறிவிட்டது.
புரோட்டாவின் விலை குறைவு, ருசி, சிறிது சாப்பிட்டாலும் வெகு நேரம் பசிக்காது இதன் காரணமாகவே உழைப்பாளர்களின் தினசரி சாப்பிடும் முக்கிய உணவாகை போனது.
புரோடாவுடன் சால்னா, கோழி கறி, புறா கறி என சைடுடிஸ்ஸாக பயண்படுத்திவருகின்றனர்.
ஊர் பேர் சொன்னால் அந்த ஊரின் சிறப்பு, அங்கு வாழ்ந்த தலைவர்கள் பெயர் தெரியுதோ இல்லையோ அந்த ஊரின் முக்கிய உணவு எஅது என்பது பலருக்கு தெரிந்து இருக்கிறது, அதுபோல் விருதுநகர் என்றால் காமராசரை தெரியுதோ இல்லையோ புரோட்டா ஞாபகத்திற்கு வரும். விருதுநகர் புரோட்டா என தமிழகம் முழுவதும் ஹோட்டலில் சாப்பிட கிடைத்தாலும் விருதுநகரில் வந்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்,
இன்று விருதுநகரை காரில் கடந்து செல்பவர்கள் விருதுநகர் பர்மா கடையில் புரோட்டா சாப்பிடாமல் போகமாட்டார்கள், முழுவதும் ஏசி செய்யபட்ட அந்த ஹோட்டலில் ஞாயிற்றுகிழமையில் கூட்டம் மிக அதிகம் உள்ளூர் மக்கள், வெளியூர் மக்கள் என குவிகின்றனர்.
மற்ற கடையில் தோசை கல்லில் சப்பாத்தி சுடுவது போல் புரோட்டா சுடுவார்கள், ஆனால் விருதுநகர் புரோட்டா என்பது பூரி சுடுவது போல் எண்ணையில் பொறித்து எடுப்பது, ஆனால் இருப்புசட்டியில் போட்டு எடுக்காமல், இதற்கு என சிறிது குழிபோன்று அமைப்பு உள்ள தோசை கல் உள்ளது. அதில் நடுவில் நல்லெண்ணை விட்டு கொதித்தவுடன், புரோட்டாவை அதில் போடுவார்கள், புரோட்டா எண்ணையில் பாதி அளவு மூழ்கிய நிலையில் தோசைகல்லின் சூடும் புரோட்டாவில் படும்.
கல்லின் சூடும், எண்ணையின் சூடும் ஒரு டூ-ன்-ஒன் போன்று சுடவைக்கப்படும்,
சுட்டு எடுத்த புரோட்டா மொறு மொறு என இருக்கும், அதில் சால்னவை ஊற்றி சாப்பிட்டால் சாப்பிடவர்கள் ருசியை மறக்கவே மாட்டார்கள். இத்துடன் புறா ரோஸ்ட், காடை வருவல் என சாப்பிடுவார்கள்.
வெளியூர் மக்களுக்கு பெரிய கடைகள் மட்டுமே தெரியும், ஆனால் பெரிய கடைகளை விட விலை குறைவாக ருசி அதிகம் உள்ள சின்ன கடைகளும், பிளாட்பார கடைகளும் விருதுநகரில் உண்டு.
ஆனால், வெளியூர்காரர்களுக்கு விருதுநகர் புரோட்டா என அழைத்தாலும், விருதுநகரில் இந்த புரோட்டாவை எண்ணைபுரோட்டா என்றே சொல்லுவார்கள்.
சைவ உணவு சாப்பிடுபவர்களும் இந்த எண்ணை புரோட்டாவில் சாம்பார் ஊற்றி ஊறவைத்து பின்னர் தேங்காய் சட்டினி, மல்லி சட்டினி என தொட்டு சாப்பிடுவார்கள், அசைவ உணவு சாப்பிடுபவர்களும் சாம்பார் ஊற்றி சைட்டிஸ்ஸாக மட்டன், சிக்கன், என வாங்கி சாப்பிடுகிறார்கள்.
இந்த புரோட்டா செய்முறை எப்படி வந்தது என வரலாறு தெரியவில்லை, ஆனால், நல்லெண்ணை கம்பெனி விருதுநகரில் அதிகம் இருப்பதால் இந்த முறையில் புரோட்டா செய்து பழகி பின் அதுவே பழக்கத்தில் வந்து இருக்கும்.
குறிப்பு:
புரோட்டா இன்று மக்கள் விரும்பி சாப்பிடாலும், இது சத்தான உணவு அல்ல, அது மட்டும்மல்லாது புரோட்டா சாப்பிடால் சக்கரை நோய் வரும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது, எனவே புரோட்டாவை தவிர்ப்போம்......
விருதுநகர் நடுவில் உள்ள தெப்பக்குளம் [கோடையிலும் வற்றாது தண்ணீர் இருக்கும்] |
புரோட்டா சாப்பிடக்கூடாது என சில ஊர்களில் ஊர்வலம் நடந்து கொண்டடிருக்கிறது.பொதுவாகவே இது போன்ற திட உணவுகள் உடல் உழைப்பாளிகள் அதிகம் இருக்கிற ஊர்களில் அறிமுகம் ஆகியிருக்கலாம்.பர்மாக்கடையிருக்கிற அதே எரியாவில் ஒருகாலத்தில் மொச்ச,பூரி,சுண்டல்,கிழங்கு,,,,,,என கிடைக்கும் மாலை வேளைகளில்/கைவண்டி தொழிலார்கள்,மூடை தூக்குபவர்கள்,இன்னும் பிற உடல் உழைப்பாளர்கள் ஒரு மொச்சை இரண்டு பூரி,வடை என கலந்து கட்டி சாப்பிட்டு சிறிதே பசியாறிவிட்டு போவார்கள்.அது சிறிது நேரத்திர்கு பசிதாங்குபவையாகவும்,புரதம்மிக்க உணவாகவும் ஆகிப்போகும்,அவர்களால் அடிக்கடி சாப்பிடமுடியாத,சாப்பிட வசதி வாய்க்காத அசைவத்திற்கு மாற்றாய் இருந்த அந்த உணவு வைகள் இப்பொழுது சுத்தமாய் அடையளம் இழந்து/தவிர அது போலானவர்களின் சம்பாத்தியத்தில் சாப்பிட கடைகளும்,அது போல் அல்லாத உயர்,மத்தியதரவகுபினர் சாப்பிட கடைகளும் இருக்கத்தான் செய்தன,இன்று அதெல்லாம் அடியோடு காணாமல் போய்விட்ட நிலையில் புரோட்டாவை எதிர்த்து ஊர்வலம் போகிறவர்கள் அது போன பின்னாய் அதன் இடத்ஹில் எதை அமர வைக யோசிக்கிறார்கள் என்பதுவும் மிக முக்கிய கேள்வியாய் உள்ளது,இந்நேரம்/நன்றி வணக்கம்.வேர்ட் வெரிபிகேஷனை எடுத்து விடலாமே.தங்களுக்கு இஷ்டமிருந்தால்/
பதிலளிநீக்குவணக்கம் சார், இன்று மொச்சை சாப்பிட கிடைக்க வில்லை , அப்படியே கிடைத்தாலும் சாப்பிட விருப்பம் இல்லாமல் உள்ளனர்,
நீக்குவணக்கம்.
பதிலளிநீக்குநல்ல பதிவு..
எண்ணை புரோட்டா என்று சொல்லும்போதிலும் எனக்கு பிடித்தது பொரிச்ச புரோட்டா என்று அழைப்பதுதான்..
இதேபோல் மதுரை அருகே இருக்கும் நத்தம் ஊரிலும் எண்ணை புரோட்டா போடுவார்கள்.
ஒவ்வொரு முறை நெல்லை செல்லும்போதும் பர்மா கடையில் சாப்பிடாமல் போவதில்லை. தற்போது இருக்கும் பர்மா கடையை விட ஊருக்குள் இருக்கும் பர்மா கடை எனக்கு பிடித்தது. இரண்டிற்கும் ஒரே வித்தியாசம் - விலை மட்டும் தான். சுவையெல்லாம் ஒன்றுதான். :)
அன்புடன்,
மதுரக்காரன்
வணக்கம் ராஜண்னா சார் , பலருக்கும் ஊருக்குள் உள்ள கடையைதான் விரும்புகின்றனர், பைபாஸ்கடை முற்றிலும் ஏஸி எனவே விலை அதிகம், பொரிச்சபுரோட்டா அழகான பெயர்,
நீக்குநன்றாக உள்ளது.
பதிலளிநீக்குவணக்கம்...
பதிலளிநீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம் ஐயா , தகவல் தெரிவித்தமைக்கு நன்றி...
நீக்குProtta is not good for our health. But, we can take occationally. It will not digest soon. Aged persons may avoid eating often.
பதிலளிநீக்கு