வியாழன், அக்டோபர் 24, 2013

பசுமைநடை27, புளியங்குளம் பஞ்சபாண்டவர்மலை





 27 வது பசுமைநடை 20.10.2013 ஞாயிற்றுகிழமை காலை 6 மணிக்கு கொங்கர் புளியங்குளம் பஞ்சபாண்டவர்மலை என ஒரு வாரத்திற்கு முன்னரே குறுஞ்செய்தி வந்தடைந்தது.
 
          20ம் தேதி காலை 5 மணிக்கு விருதுநகர் சூலக்கரையில் இருந்து கிளம்பினேன், முன் தினம் இரவு நல்ல மழை எனவே காலையில் குளிராக இருந்ததால்  காதை மட்டும் மறைக்கும் ஸ்வெட்டர் மாட்டிக்கொண்டு பைக்கில் புறப்புட்டேன், விருதுநகர் பைபாஸ்ரோட்டில் உடன் வருவதாக சொன்ன நண்பர் முருகனை பைக்கில் ஏற்றிகொண்டு மிதமான வேகதில் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தேன், கள்ளிக்குடி நெருங்கும் சமயம் வானில் வெளிச்சம் ஏறிக்கொண்டிருந்தது,
   
         திருமங்கலம் வந்தவுடன் செக்காணூரணி வழியாக செல்வோம் என முடிவு செய்து அந்த வழியாக சென்றோம் எதிர்புறம் மிக அதிகமான லாரிகள் வந்து கொண்டிருந்தது எனவே கவணத்துடன் பைக் ஓட்டவேண்டி இருந்தது, 15 கி.மீ செக்காணூரணி வந்தது, மதுரை சாலையில் திரும்பி 3 கி.மீ புளியங்குளம் வந்தது, நாங்கள் சென்ற சமயம் மணி 6.25 இன்னும் ஆர்வலர்கள் வராததால் பல்கலைகழகம் சென்றோம், அங்கு அறிமுகம் ஆன நண்பர்கள் சிலரும், புதியவர்கள் பலரும் வந்து காத்திருந்தனர்,

        இந்த முறை ஆர்வலர்களுக்காக அதிகம் நேரம் காத்திருக்காமல் ஏற்கனவே வந்து இருந்த ஆர்வலர்களுடன் இருசக்கர வாகனம், கார் என புறப்பட்டோம், 3 கி.மீ தேனிசாலை வழியாக சென்றால் இடது பக்கம் பஞ்சபாண்டவர் மலை , சாலைக்கு மிக அருகிலேயே மலை அமைந்துள்ளது.




      மலைக்கு முன்பாக ஒரு பெரியாஅழமரம் அதை ஒட்டி புதிதாக அமைக்கப்பட்ட கல்மண்டபம் அழகாக காட்சியளிக்கிறது. அங்கு இருந்து மேற்கு பக்கம் மலை பாதை ஆரம்பித்துவிடுகிறது,  சிறுசிறு பாறை வழியாக பாதை சற்றே சிரமமாக தான் உள்ளது,  சிறிது தூரம் நடந்தபின்  சமணர்பாறை உள்ள அடிவாரத்திற்கு அருகில் சமணர்வரலாற்றை சொல்லும் கல்வெட்டுகள் சமூக விரோதிகளால் ஒடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது,

     அங்கு இருந்து பாறைக்கு எளிதாக ஏற தொல்லியல் துறையினரால் இரும்பு ஏணி பாதை அமைக்கப்பட்டுள்ளது, அதில் ஏறிதான் சமணர் படுக்கைகளுக்கு போகமுடியும், அகலம் குறைந்த ஆனால் நீளமான குகை சுமார் 60 படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளது, குகையில் சமூகவிரோதிகள் குடித்துவிட்டு போடுவிட்டு சென்ற மதுபாட்டில்கள் , சீட்டுக்கட்டு கார்டுகள் சிதறி காணப்பட்டது,
        சுமார் 80 பேர் அங்கு அமர தொல்லியியல் ஆய்வாளர் ஐயா.திரு. சாந்தலிங்கம் அவர்கள் அந்த இடம் பற்றிய வரலாறு அங்கு செதுக்கிய பிராமிய எழுத்துக்களில் எழுதப்பட்ட விபரங்களை எடுத்துசொன்னார்கள்,

        சேர நாட்டுக்கும், பாண்டியநாட்டுக்கும் வணிகபாதையாக இது இருந்துள்ளது, வணிகபாதையில் சமணபடுக்கைகள் கொண்ட மலைகள் உள்ளது, எனவே அன்றைய வணிகர்கள் சமணத்தை சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

        சாந்தலிங்கம் ஐயா பேசிக்கொண்டு இருக்கும் போது ஆர்வலர்கள் வந்துகொண்டே இருந்தனர் முடிவில் 150 க்கும் மேல் வந்துள்ளதாக கூறினர். அதன் பின் முத்துகிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று இளைஞர்கள் குகையில் காணப்பட்ட குப்பைகளை சுத்தம் செய்தனர், சிறுது நேரத்தில் அந்த குகை அழகாக மாறியது, வருங்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது எனபதை நேரில் பார்க்கமுடிந்தது.




    அங்கிருந்து மேற்கு பாதை வழியாக மலை உச்சிக்கு சென்றோம் சற்றே கடினமான பாதைதான், செல்லும் வழியில் மலை ஊற்று நிறைந்து பாறையில் தண்ணீர் வடிய குடித்துபார்த்தோம் புளிப்பு சுவையுடன் இருந்தது. அதன் அருகில் உயரமான பாறையில் தீர்த்தங்கர் சிலை செதுக்கியுள்ளனர், அந்த சிலை கிமு 910 ல் செதுக்கியுள்ளதாக தகவல் கூறினர்,

    மலை உச்சியில் ஒரு கோவில் உள்ளது அது பெருமாள் கோவில்[ பெருமால் தம்தேவியர் இருவரோடு உள்ள சிலை உள்ளதால் அதை பெருமாள் கோவிலாக மக்கள் வழிபடுவருகின்றனர்]  முந்தினம் மழை பெய்து மலை குளிர்ந்து காணப்பட்டதால் மலை உச்சியில் வெகுநேரம் இருந்தோம், அங்கு இருந்து கீழே பார்த்தால் பச்சை கம்பளம் விரித்த போர்வையாக இயற்கை காட்சியளித்தது, பார்த்துகொண்டே இருக்கலாம், பலர் அங்கு உட்கார்ந்துவிட்டனர்,  ஒரு பக்கம் பூந்தோட்டத்தில் பூ பறித்துகொண்டு இருப்பதை பார்க்கமுடிந்தது, இன்னொரு பக்கம் மலை உடைத்து ஏற்படுத்திய பள்ளத்தில் மழையால் நிறைந்து குளமாக மாறிய செயற்கை குளத்தில் பக்கத்து ஊர்காரர்கள் குளித்துகொண்டு இருந்தனர். மலை  உச்சியில் இருந்து மனிதர்களை பார்க்கும் போது பொம்மையாக தெரிந்தனர்.
 






 

       மலையின் வடக்கு பக்கம் நாகமலைமுழுமையாக அருகில் பார்க்கமுடிந்தது, வெயில் சுத்தமாக இல்லை மழை மேகங்கள் வானில் சூழ்ந்து அந்த இடமே ஒரு சொர்க்கலோகமாக காட்சியளித்தது. ஆர்வலர்களுக்கு மலையைவிட்டு கீழே இறங்கவே மனம் இல்லை, மணி 9 ஆனதால் பசி எடுக்க மலையைவிட்டு இறங்கினோம்,

     இந்த முறை புகழ்பெற்ற புகைபட கலைஞர்கள் அதிகமாகவே வந்து இருந்தனர், ஸ்ரீராம்ஜெனக், சுந்தரராசன், செல்வம்ராமசாமி, ராஜன்னா, அமுதன், அருண், ரகுநாத் என பலர் கலந்துகொண்டு விலை உயர்ந்த கேமராவில் அந்த இடத்தின் அழகை கொள்ளையடித்து கொண்டு இருக்க, நானும், பாலா அவர்களும் சாதாரண  டிஜிட்டல் கேமராவில் அங்குள்ள அழகை திருடிக்கொண்டு இருந்தோம்,

    மலையில் இருந்து இறங்கி கல்மண்டபத்தில் அமர வந்திருந்த அணைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது, சிறிது நேரம் அங்கிருந்து விட்டு , பசுமைநடையின் பசுமையான நினைவுகளுடன் வீடு திரும்மினோம்.


 மீண்டும் சந்திப்போம்.......

   பசுமைநடை27  நண்பரின் அழகான பதிவை இங்கு பார்க்கவும்..  ராஜன்னா


படம் உதவி : சுந்தரராசன்,குணாஅமுதன்,செல்வம்ராமசாமி, பிரசாத்














7 கருத்துகள்:

  1. ஒருமுறை என்னையும் கூட்டிச் செல்லுங்கள்...

    பதிலளிநீக்கு
  2. உதயகுமார் பாலகிருஷ்ணன்24 அக்டோபர், 2013 அன்று PM 6:07

    நல்லதொரு பதிவு... பசுமை நடை செல்வதோடு நில்லாது அதன் அனுபவத்தை பதிவிடுவது பங்கேற்காத மற்றவர்களையும் பங்கெடுத்த நிறைவையும், பங்கேற்க வேண்டுமென்ற எண்ணத்ததையும் தூண்டுகிறது... தொடர்ந்து பதிவிடுங்கள்...

    பதிலளிநீக்கு
  3. தன்பாலன் சார் அடுத்த நடைக்கு தங்களுக்கு தகவல் கூறுகிறேன்

    பதிலளிநீக்கு
  4. தனபாலன் அண்ணன் வரேன் வரேன்னு சொல்லிட்டே இருக்காரே தவிர வர மாட்டேங்கிறாரு.. அடுத்த தடவை கூட்டிக்கிட்டு வந்துருங்க சார்.

    அருமையான பதிவு. நல்ல புகைப்படங்கள். புகைப்படங்கள் சிறப்பாய் எடுக்க நல்ல கேமரா அவசியம் தான். ஆனால் சாதாரண கேமிராவில் கூட நல்ல படங்கள் எடுக்கலாம். உங்கள் படங்கள் நன்றாகவே உள்ளன.. அதனால் கவலை வேண்டாம். :)

    பதிலளிநீக்கு
  5. DEAR DANABALAN SIR , ENGALAIPONDRA VARA MUDIYATHAVARKALUKKU NALLA UPAYOGAMANA THAGAVAL , NANRI ,THODRATTUM UNGAL PAYANAM.

    பதிலளிநீக்கு
  6. பசுமைநடைப் பயணத்தை நினைவூட்டும் அற்புதமான பதிவு. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு