வியாழன், மே 23, 2013

பற்களின் ஆரோக்கியத்திற்கு ஹோமியோபதி மருத்துவம்

 

    “பல் போனால் சொல்போச்சு” என முதுமொழி உண்டு.

   பத்திரிக்கையிலும் , டிவி யிலும் உங்கள் பற்கள் வெண்மையாகவும், ஆரோக்கியமாகவும் திகழ எங்கள் பற்பசையை உபயோகிப்பீர் என் நீண்ட நெடுங்காலமாக விளம்பரம் செய்தும்,அந்த குறிப்பிட்ட பிராண்ட் பற்பசையை உபயோகிப்பவர் வீட்டில் இன்றும் பற்கள் உபாதையுடன் தான் உள்ளார்கள்.

    ஆனால் பற்பசை உற்பத்தி நிறுவனங்களோ உங்கள் பேஸ்டில் உப்பு உள்ளதா? குளோரைடு உள்ளதா? என்று மாறி மாறி பது உத்தியுடன் வியாபாரத்தை மட்டும் விரிவுபடுத்தவே செய்கின்றன.

     உங்கள் பூச்சிபற்களில் எங்கள் மருந்தை தடவினால் பூச்சிகள் வெளியே வந்து விழும் என கூறி விற்பனை செய்கின்றன. கண்ணுக்குத் தெரியும் அளவில் பூச்சிகளோ , புழுக்களோ பற்களில் கிடையாது பூச்சி பற்களில் சிலர் புகையிலை, பொடி வைத்துகொள்வார்கள் அதுவும் தவறான பழக்கம்.

    பூச்சிகளால் குடையப்பட்ட பற்களைம், உடைந்த பற்களையும் பல் மருத்துவரிடம் காட்டி சீராக்கி கொள்ள வேண்டும்.  நல்ல பற்கள் நமது வாழ்நாள் முழுவதும் கேடயமாக இருந்து உடலைக் காக்கின்றன.

   நாம் உண்ட உணவு நன்றாக சீரனமாக வேண்டும் எனில் உண்ணும் உணவு நன்றாக் மென்று அரைபடவேண்டும். அதற்கு பற்கள்தான் முதல் காரணம். எனவே பற்களை பாதுகாக்க நாம் முதல் கடமையாக கொல்லவேண்டும். பல் வலி வரும் முன்பே பற்களை நாம் பாதுகாத்து கொள்ளவேண்டும். சாப்பிடும் உணவை ஒரு பக்கம் மட்டும் மெல்லாமல் இரண்டு பக்கமும் மென்று வரவேண்டும், அப்போதுதான் பற்கள் இரண்டு பக்கமும் ஆடாமல் உறுதியாக இருக்கும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒரு பல் பிடுக்கபட்டால்  அந்த இடத்தில் வேரு பல்  பொருத்தபட வேண்டும், இல்லையெனில் பிடுங்கப்பட்ட ப்ல்லின் மேல் கீழே இறங்க வாய்ப்பு உள்ளது. உனவு அந்த இடத்தில் அரைபடாமல் போவதால் அந்த பகுதி பற்கள் ஈறுகளை விட்டு  வெளியே வர அதிக வாய்ப்பு உள்ளது.

   உடம்பில் யூரியா கழிவு அதிகம் இருந்தால் பற்களில் மஞ்சள் நிறம் படிந்து இருக்கும்.

  ஆண்டிபயாடிக் மருந்துகள் அதிகம் சாப்பிடுவதால் பற்களில் பாதிப்பு ஏற்படும். புகையிலை, சிகரெட், வெற்றிலைபாக்கு காரணமாகவும் பற்களில் பாதிப்பு ஏற்படும். வைட்டமின் “சி” குறைபாடுகள் பற்களை பாதிக்கும்.


  •       பற்களின் வளர்ச்சி நிலை


 *   பற்களின் முதல் வளர்ச்சி கருவுண்டான  6 வது வாரத்தில் பல்லுக்கான  
       சிரு மரு தோன்றுகிறது.

 *   குழந்தை பிறந்து 6 வது மாதம் பல் முளைக்கிறது. இதுவே பால் பல் என 
      கூறுவார்கள். 20 வாரத்திற்குள் 20 பற்கள் வரை முளைக்கின்றன.

 *   பெண் குழந்தைக்கு 6 வது மாதம் முதல் பால் பல் முளைத்தால் , அந்த  
      குழந்தை 12 முதல் 13 வயதில் பருவம் அடைவால் , 7 வது மாதத்தில் பால்
      பல் முளைத்தால்  14 முதல் 15 வயதிற்குள் பருவம்  அடைவாள் என சில
       மருத்துவர்கள் கூறுகின்றனர், அது பெரும்பாலும் அனுபவ உண்மையாக
       இருக்கிறது.

  *   6 வது  வயதில்  இருந்து  பால் பல் விழுந்து  நிலையான  பற்கள்
        முளைக்கின்றன

  *  13 வயதிற்குள் 28 நிலையான பற்கள் முளைத்துவிடும், 22 வயதிற்குள் 32
      பற்கள் தோன்றுகின்றன.

  *  ஒவ்வொருவருக்கும் 12 கடவாய் பற்கள் உண்டு, நிலையான பற்கள்
       விழுந்தால் பின் முளைக்காது.                                                        
                                                                                                                               
        பற்களின் பாதுகாப்புவழிகள் பல உண்டு அதில் ஒரு சில:

             பற்கள் துலக்கிய பின் , நமது கைவிரல்கொண்டு ஈறுகளை மெதுவாக அழுத்தம் தரவேண்டும் இப்படி அழுத்துவதால் ஈறுகளின் உள்ளே இருக்கும் அசுத்தம் வெளிவரவும், பற்கள் இறுகவும் வாய்ப்பு இருப்பதால் பற்கள் ஆடுவது தவிர்க்கப்படுகின்றது.  இரவு படுக்கும் முன் பற்கல் முழுவதும் நல்ல தேனை தடவி சிறிதுநேரம் கழித்து வாயை கொப்பளித்தால் பல்லில் உள்ள கண்ணுக்கு தெரியாத உணவு கிருமிகள் வெளிவந்து விடும், இது பற்களுக்கு ஆரோக்கியம் தரும். தொடர்ந்து செய்துவந்தால் ஆடாத ஆரோக்கிய பற்கள் நம்மிடம் இருக்கும்.


  •   பல்வலி சார்ந்த குறிகளும், அதற்கு பயன்படும் ஹோமியோபதி மருந்துகள் விபரம்.


மெசிரியம்      :       பற்களின் அடிப்பாகத்தில் சொத்தை  விழுதல், மேல்பாகம்
                                      நன்றாக இருக்கும். நல்ல ப்ற்களில் கூட வலி இருக்கும்.

 தூஜா                :      பற்களின் அடிப்பாகம் நன்றாக இருக்கும், மேல்பாகம்
                                     சொத்தையாக இருக்கும்.

 ஹெக்லவாலா : பல்வலி ஏற்பட்டு முகம் முழுவதும் வலி இருக்கும்,
                                      ஈறுகளில் சிறுசிறு கொப்பளங்கள் ஏற்பட்டு வலி
                                      ஏற்பட்டு வலி உண்டாக்கும். பல் பிடுங்கிய பின் ஏற்படும்
                                      வலிகளுக்கு பயன்படும்.

 மேக் கார்ப்:           பல் முளைக்கும் காலத்தில் ஏற்படும் வலிகள்.

கிரியாசோட்டம் : பொதுவான பற்சொத்தை வலிகளுக்கு பயன்படும்,
                                     

 ஸ்டாபிசாக்ரியா :கர்ப்பகாலத்தில் ஏற்படும் பல்வலிகளுக்கு அற்புதமான
                                         மருந்து, வெதுவெதுபான நீர் பட்டால் வலி குறையும். பல்
                                        அடிப்பாகத்தில் சீல் இருக்கும் அதனால் ஏற்படும் வலி.

   இதுபோன்று குறிகளுக்கு ஏற்ப அதற்கு பயன்படும் ஹோமியோபதி மருந்துகளை தந்தால் வலிகள் குறையும்,

 குறிப்பு ;  வலிகள் தன்மை, வயது, இதற்கு ஏற்ப மருந்துகளின்  வீரியம் மாறுபடும் எனவே ஹோமியோ மருத்துவர்  ஆலோசலனைக்கு பின் மருந்துகள் எடுத்துகொள்ளவும்.

  எந்த பக்க விளைவும் இல்லாத ஹோமியோபதி மருத்துவம் எடுத்துகொள்வோம் ,மனித நலம், உடல் நலம் காப்போம்.

வெளியீடு: தீபா பதிப்பகம்,சாத்தூர்

   [ மாற்றுமருத்துவ மாத இதழில் வெளியிவந்து, அதன்பின் சமீபத்தில் ”ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஹோமியோபதி ” என்ற தொகுப்பு நூலிலும் வெளிவந்த எனது கட்டுரையின் சுருக்கம்]

திங்கள், மே 13, 2013

பசுமைநடை பயணம் 22 கீழவளவு [கிரீன்வாக்]


   கிரீன்வாக்22 கீழவளவு 12.5.13 ஞாயிற்றுகிழமை  என அ.முத்துகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து குறுந்தகவல் வந்தவுடன், விருதுநகர் நண்பர்களிடம் தகவல் கூற ,அன்று முகூர்த்ததினம் என ஒரு சிலரும், காலை 4 மணிக்கு புறப்படவேண்டுமா என ஒரு சிலரும் வரவில்லை என்றனர். கடந்தமுறை விருதுநகரில் இருந்து 14 பேர் கலந்துகொண்டோம்., இந்தமுறை 4 பேர் மட்டுமே புறப்பட்டோம்.
    மிக கண்டிப்பாக காலை 6 மணிக்கே வந்துவிடவும் என கூறியதால், விருதுநகரில் 4.30 மணிக்கு பஸ் ஏறினோம்,  6.15 மணிக்கு மாட்டுதாவணியில் இறங்கினோம். பேருந்துநிலையத்தின் எதிர்புறம் சென்றபோது பசுமைநடை ஆர்வலர்கள் பலர், பேராசிரியர்.சாந்தலிங்கம் ஐயா, மற்றும் அ.முத்துகிருஷ்ணன் ஏற்கனவே வந்து இருந்தனர்.
    இது வரை சென்ற பசுமைநடை மதுரையில் இருந்து 15 கி.மீ க்குள் தான் இருக்கும், இந்த முறை 45 கி.மீ தள்ளி உள்ள கீழவளவு மலை, கிரானைட் மாபியா கும்பலால் உடைக்கப்பட்ட மலைகளின் குவியல் நிறைந்த பூமி, இன்றும் வெட்டிய கிரானைட் கற்களை மதிப்பிடமுடியாமல் திணரும் இடம்.அங்கு ஓர் பசுமைநடையா.?

    45 கி.மீ தள்ளியுள்ளதால் பைக்கில், காரில் வந்த நண்பர்களை வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு பேருந்தில் அழைத்து செல்வது என முடிவு செய்து பேருந்தும் , வேனும் ஏற்பாடு செய்து இருந்தார் அ.முத்துகிருஷ்ணன். இன்னும் வராதவர்களை போனில் தொடர்புகொண்டிருந்தார். நானும் நண்பர் எஸ்.அர்ஷியா  இன்னும் வரவில்லையை என போன் செய்தபோது ஒரு திருமணத்திற்கு செல்லவேண்டியுள்ளதால் வர இயலவில்லை என்றார். அவசியம் கலந்து கொள்வதாக கூறிய கவிஞர். பேனா மனோகரன் அவர்கள் எனக்கு முன்பாகவே அங்கு வந்துயிருந்தார்.

     நண்பர்களுடன், குடும்பத்துடன் என பலரும் இணைந்துகொண்டிருந்தனர். காலை 6.30 ம்ணிக்கு குரு மெட்ரிக் பள்ளியை சேர்ந்த பேருந்தும்,வேனும் வந்தது. இன்றைய பசுமைநடைக்காக இலவசமாக தந்து உதவினார்கள், பள்ளியின் தாளாளர், திரு.குகன் அவர்கள், விபரத்தை அ.முத்துகிருஷ்ணன் கூற, திரு. குகன் அவர்களுக்கு பாராட்டுதலை தெரிவிக்கும் விதமாக கைதட்டி தங்கள் மகிழ்வை தெரிவித்தனர்.

       காலை 6.40 மணிக்கு புறப்பட்டோம். பசுமைநடை ஆர்வலர்கள் ஒரே  பேருந்தில் பயணம் செய்தது ஒரு சமத்துவபயணமாகவே இருந்தது. ஆங்கிலநாளிதழ், தமிழ் நாளிதழ் நிருபர்களும் எங்களிடன் வந்தனர். மேலூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் கீழவளவு உள்ளது. மேலூர் தாண்டியவுடன் கீழவளவு வரை ரோட்டின் இருபக்கமும் கழிவு கிரானைட் கற்கள் கொட்டப்பட்டுள்ளது. கீழவளவு தாண்டியவுடன் வலதுபக்கம் ரோட்டில் இருந்து 300 மீட்டர் தள்ளி பஞ்சபாணடவர் மலை உள்ளது.7.30 மணிக்கு மலையை அடைந்தோம்.

    மலையில் சிறிது தூரம் ஏறியவுடன் சமணர் படுக்கை குகை காணப்படுகிறது. அந்தகுகையின் பாறை இயற்கையாகவே பம்பரம் போன்ற அமைப்பில் உள்ளதால் சுமார் 30 பேர் வட்டமாக படுக்கும் விதமாக படுக்கைகள் வழவழப்பாக அமைக்கப்பட்டுள்ளது., இந்த சமணபடுக்கைகள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. அந்த இடங்களில் உட்கார்ந்து பார்த்தால் குளுகுளு என காற்று அடித்தது, படுத்தால் தன்னை மறந்து தூங்கலாம். மழை பெய்தால் வழியும் தண்ணீர் படுக்கையை நனைக்காமல் செல்ல வாய்க்கால் போன்று காடி வெட்டியுள்ளனர்.



பசுமை ஆர்வலர்கள் அங்கு அமர்ந்தோம்.பேராசிரியர். சொ.சாந்தலிங்கம் ஐயா அவர்கள் இந்த இடங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார். இந்த இடம் 2500 வருடங்களுக்கு முந்தி உருவாக்கப்பட்டுள்ளது, 1903 ம் ஆணடு திரு.வெங்கோபராவ் என்பவரால் இந்த இடம் கண்டரியப்பட்டது. இக் குகையின் மேல் உள்ல பாறையில் இரண்டு தீர்த்தங்கரர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது, அதன் கீழ் தமிழ்பிராமிய எழுத்துக்கள் தலைகீழாக இடவலமாக பொறிக்கப்பட்டுள்ளது. நேராக நின்று பார்த்தால் தலைகீழாக உள்ள எழுத்துக்கள்,  படுத்துக்கொண்டு பார்த்தால் படிக்கும் விதத்தில் உள்ளது,
     படுக்கைகளின் கிழக்கில் உள்ள பாறைகளில் 6 தீர்த்தங்கரர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இப்போது உள்ள ரெசிடன்சி பள்ளியை போன்று இங்கு மாணவர்கள் தங்கி கல்வி கற்றுள்ளனர்.

    தென் தமிழகமே சமணசமயத்தில் இருந்துள்ளது. அவர்கள் கல்வி அறிவை கற்றுதந்துள்ளதால் தான் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள், சீவகசிந்தாமணி போன்றவை படைக்கப்பட்டுள்ளது, சமணம் அகிம்சையை வழியுறுத்தியதால் மற்ற சமயங்கள் சமணர்களை கொடுமைபடுத்தியபோதும் இவர்கள், ஒதுங்கி போய்விட்டனர். மதுரையை சுற்றி சமணர் மலைகள் இருந்தும் இப்போது யாரும் இல்லை, தமிழகத்தில் வந்தவாசி பகுதியில் இப்போதும் சமண சமயத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்துவருகின்றனர்.

    நாங்கள் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து மலையின் வடக்கு பக்கம் பார்த்தபோது கண்ணுக்கு எட்டியதூரம் வரை பசுமை பசுமை என தென்னை மரங்களும், வயல்வெளிகளும் தான், கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்சியை தந்தது, அங்கிருந்து மேலும் நடந்து மலையின் உச்சிக்கு சென்ற போது நான்கு பக்கமும் பார்க்கமுடிந்தது,

    மலையின் வடக்கு பகுதியை பார்த்தபோது பச்சை ஆடை உடுத்தியது போல் பசுமையை ரசித்தவாரே   மலையின் தென் பகுதியை பார்த்தபோது அதிர்ச்சிதான் கண்ணுக்கு எட்டியதூரம் வரை கிரானைட் பாறைகளின் அணிவகுப்புதான், மைசூர்பாக்கை வெட்டி வைத்தது போன்று வயல்வெளிகள், கண்மாய்கள் என  நிலம் தெரியாதயளவு ஒரே பாறை துண்டுகள், கிரானைட் குவியல்கள். கிழக்கே தூரத்தில் தெரிந்த ஒரு மலை  பாதியாக காணப்பட்டது. கீழவளவு தென்பகுதியில் ஒரு மலைகுன்று காணப்பட்டது, அதில் ஒரு கோவிலும் இருந்தது ஆனால் இன்று அது கிரானைட்  கற்களாக மாறி மலை காணாமல் போய்விட்டது.

       மலைகள் உடைக்கப்பட்டு அடுக்கப்பட்ட காட்சியை பார்த்து கலங்கிநின்ற பசுமைஆர்வலர்கள் மத்தியில் அக்னி குஞ்சுகள் என்ற தன் கவிதையை கணீணென்ற குரலில் கவிஞர்.பேனாமனோகரன் அவர்கள் வாசிக்க, கவிதையின் பொருளும் அந்த இடமும் பொருந்தி போக பசுமைஆர்வலர்கள் மனதில் அந்த இடம் மறக்கமுடியாத அனுபவபதிவை பதித்து சென்று இருக்கும்.








    மலையின் அடிவாரத்தில் அழகிய ஆலமரம் அங்கு காலை உணவை சாப்பிட்டுக்கொண்டே சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்துகொண்டிருந்தோம்.அந்த சாலையில் தினசரி ஆயிரம் பேர் கடந்துகொண்டிருக்கின்றனர். இந்த மலையையும் பார்ப்பார்கள்.. ஆனால் இந்தமலையின் சிறப்பை அறிந்து இருக்கமாட்டார்கள், நானும் இந்த வழியா திருப்பத்தூர், காரைக்குடி சென்று இருக்கின்றேன் ஆனால் பசுமைநடை  மூலம் இப்போது தான் அறிந்து நேரில் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தென்றலின் கையை பிடித்து கொண்டு நந்தவனத்தில் நடந்தைபோல் எழுத்தாளர்களுடன், கவிஞர்களுடன் மலைஏறிய அனுப்வம், சித்திரைக் காரனுடன் மலையில் உலாவிய அனுபவம் என மறக்கமுடியாத பசுமைநடையாகவே கீழவளவு பயணம் அமைந்தது.





























ஞாயிறு, மே 05, 2013

தவிப்பு


காலையில் பின் பக்க வாசலில் உட்கார்ந்து பல் தேய்த்து கொண்டிருந்த மனைவி சூ சூ என விரட்டிகொண்டிருந்த சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது பின் பக்க வாசல் படியின் கீழ் ஒரு பூனை குட்டிபூனை உட்கார்ந்து இருந்தது, இது யார் வீட்டு பூனை என கேட்டேன், ம் எனக்கு எப்படி தெரியும்,எல்லாம் எனக்குன்னு வந்து வாய்க்குதுக என காப்பி போட எழுந்து சென்றாள்.
         
          வாசபடியில் உட்கார்ந்து கொண்டு பூனையை பார்த்தேன் குட்டிபூனை என் கால் அருகில் வந்து உட்கார்ந்து மியாவ் என பலகீனமாக குரல் கொடுத்து என்னை பார்த்தது, அதே நேரம் மனைவியும் எனக்கு காபி தர வாங்கிய நான் சிறிது காப்பியை தரையில் ஊத்தினேன் நக்கி சாப்பிட்டுவிட்டு மீண்டும் என்னை பார்த்தது, உங்களுக்கு தந்தா பூனைக்கு ஊத்துரீங்க அப்புறம் பூனை எங்கும் போகாது போங்க குளித்துவிட்டு வேலைக்கு கிளம்புங்க என மனைவி கத்த காப்பியை குடித்து விட்டு குளிக்க கிளம்பினேன்

         . மாலை வீட்டுக்கு வந்தா , பின்கதவை திறக்க முடியல பூனை வீட்டுக்குள் வந்துவிடுது என மனைவி புலம்ப பின் பக்கம் சென்றேன், பூனை பின் பக்க படியில் உட்கார்ந்து இருந்தது, சூ என விரட்டினேன் போகாமல் விரட்டும் என்னை பார்த்து மியாவ் என்றது, தண்ணியை எடுத்து அதன் மேல் ஊற்றினேன் அது வேண்டா வெறுப்பாக வீட்டின் சைடு பக்கம் உள்ள தோட்டத்துகுள் சென்றது, அதே நேரம் ஒரு நாய் துரத்த பூனை மரத்தில் ஏறி கொண்டது.

         இப்படியாக பின் வாசல் கதவை திறக்குப் போது எல்லாம் பூனை படியில் உட்கார்ந்து இருக்கும், சிலசமையம் இருக்காது, அப்பாட என மனைவி நினைக்கும் சமயம் தோட்டத்தில் இருந்து வந்துவிடும். பின்பக்கமே உட்கார் முடியவில்லை என மனைவி புலம்பினாலும் அவ்வம் போது மோர் சாதம் , பிஸ்கட் வைப்பாள், எனவே பூனை எங்கும் போகாமல் இங்கேயே இருந்தது, சிலநேரம் நாய் துரத்தும் பூனை மரத்தில் ஏறிக்கொள்ளும், பூனை மரம் ஏறும் போது மரத்தில் உள்ள குருவிகள் பயத்தில் கத்தும்.

            இப்படி பத்து தினம் கடந்து இருக்கும் , ஒரு நாள் காலையில் குளித்துகொண்டு இருந்தேன், மனைவியும்,மகளும் கத்தும் குரல் கேட்டு கதவை திறந்துகொண்டு பதட்டத்தோடு வந்து பார்த்தபோது முன் வாசலில் மனைவி கோலம் போட்டுகொண்டு இரந்த போது பூனை முன் வாசல் வழியாக நுழைந்து விட அதைபார்த்து தான் கத்தியுள்ளார்கள். பதட்டதோடு வந்த நான் கோபத்தில் பூனையை காலால் எத்தினேன், கத்திகொண்டே பின் வாசல் வழியாக ஓடிவிட்டது. ஏங்க எத்திரீங்க என மனைவி கேட்க, ஆமா மனுசனை நிம்மதியா குளிக்கவிடுரீங்களா என கத்தினேன்.

            சமையல் அறையை ஒட்டியே பின்வாசல் கதவு, குளித்துவிட்டு சாப்பிட்டுகொண்டு இருக்கும் போது மியாவ் என குரல் கொடுத்து கொண்டு பூனை வாசல் வழியாக எட்டிபார்த்தது, கையில் இருந்த இட்டலி துண்டை பூனை முன் துக்கிபோட வந்து சாப்பிட்டது பூனையின் தலையை தடவி தந்தேன் பேசாமல் இருந்தது, அப்படியே பூனை கழுத்தை பிடித்து தூக்கி ஜவுளி வாங்கும் போது தந்த கட்டை பையில் வைத்து பையை இருக்க மூடிபிடித்து கொண்டேன்,மகளை பெப் ஸ்கூட்டரை ஓட்டசொல்ல பின்னால் உட்கார்ந்து கொண்டு, வீட்டில் இருந்து ஒரு கி.மீ தள்ளி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பையை திறந்து பூனையை வெளியில் விட்டேன். வெளியில் வந்த பூனை எங்களை பார்த்துவிட்டு புதர்குள் ஓடிவிட்டது.

               அப்பாடா என நிம்மதி மூச்சைவிட்டுவிட்டு வீடு வந்தேன். பாதியில் விட்ட சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு உடைமாற்றி அலுவலகம் கிளம்ப பைக்கை வாசலில் இருந்து கீழே இறக்கிகொண்டு இருந்தேன், மியாவ் என குரல் கொடுத்துகொண்டே என்னை கடந்து என் வீட்டு தோட்டத்தில் நூழைந்த பூனையை நானும், என்னை வழி அனுப்பவந்த மனைவியும்,ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்தோம். அலுவலகம் செல்லநேரம்மானதால் மாலையில் பார்த்துகொள்ளலாம் என் புறப்பட்டேன்.

                   அலுவலகத்தில் நண்பர்களிடம் பூனையை பற்றிகூறினேன், என் வீட்டில் இருந்து ஒரு கி.மீ தள்ளி போய் பூனையை விட்டுவந்தேன் இடையில் பல வீடுகள் உள்ளது, அதையெல்லாம் கடந்து என் வீட்டுக்கு எப்படி வந்தது என தெரியவில்லை என்றபோது நண்பர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.தோழர் நல்லபாசமுள்ள பூனையாக இருக்குது பேசாம் நீங்களே வளர்க்வேண்டியதுதானே என்றனர். இல்லை சாய்ந்திரம் போய் வேறு இடத்தில் போய்விட வேண்டும் என கூறியபோது, சிலர் திட்டினார்கள்.

               மாலை வீடு வந்தபோது பூனையை காணவில்லை, பூனையை காணாம் எங்கே என மனைவியிடம் கேட்டேன் ஆமா எங்களையெல்லாம் தேடாதீர்கள்,என கூறிகொண்டு இருக்கும்போதே மியாவ் என குரல் தந்தவாரே பின் வாசலில் வந்து எட்டிபார்த்தது,பிடித்து வேறு இடத்தில் விட்டுவிடுகிறேன், என கூற மழைமேகமாய் இருக்கு நாளை பார்த்துகொள்ளலாம் என கூறிவிட்டாள்.

            மறுநாள் காலை மனைவி கோலம் போட்டுகொண்டிருந்தாள், அவளை கோலம்போடவிடாமல் அவள் காலேயே சுற்றிவந்தது. உடன் பூனையை பிடித்து மீண்டும் கட்டைபையில் போட்டுகொண்டும், 5 கி.மீ தள்ளி போய் விட்டுவிட்டு வந்தேன். காலையில் எழுந்த மகள் பின் பக்கம் சென்று பூனையை காணாம் என தேடினால், பூனையை விட்டுவந்த விஷயத்தை கூறினேன். தினம் எழுந்து நான்,மனைவி,மகள் பின் பக்கம் சென்று பார்ப்போம்,பூனை வந்து இருக்குமோ என ஆனால் பூனை இருக்காது,

          மூன்று நாள் கடந்து இருக்கும்,காலையில் முன் வாசலில் நின்று பல் தேய்த்து கொண்டிருந்தேன்,மியாவ் என சப்தம் உடன் என்னுள் ஒரு உணர்வு வாசலில் எட்டிபார்த்தேன் பூனையை காணவில்லை,பிரம்மையாக இருக்கும், என நினைக்கும் போதே மீண்டும் மியாவ் என சப்தம். இந்தமுறை பின் வாசல் பக்கம் குரல் வந்தது, அதே நேரம் படுத்து இருந்த என் மகளும் பின் பக்கம் எழுந்துபோக, சமைத்துகொண்டிருந்த மனைவி பின் கதவை திறக்க அங்கே மியாவ் என்றவாறே உள்ளே எட்டிபார்த்தது.

         மூன்று நாள் எங்களுக்குள் இருந்த தவிப்பு ஆச்சரியமாய் மாறி சந்தோஷமாய் ஆனது.