புதன், ஜூன் 26, 2013

பசுமைநடை பயணம் 23 [கிரீன்வாக் 23] கருங்காலக்குடி

 பசுமைநடைபயணம் 23 [கருங்காலக்குடி]


 ஒவ்வொருமுறையும் பசுமையைநடைபயணம் பதிய அனுபவத்தை தருகிறது,  ஏற்றகனவே சென்றுவந்ததை போல் அல்லாமல் வேறு வேறு புதிய அனுபவத்தை தருவதால் மீண்டும் மீண்டும் பசுமைநடையில் கலந்துகொள்கிறேன்.

  அதுபோல்தான் கருங்காலக்குடி பஞ்சபாண்டவர் மலை பயணம் 23.06.2013 அன்று சென்றேன்.
   வழக்கம்போல் மாட்டுதாவணியில் சந்தித்து பசுமைநடை ஆர்வலர்களுக்கு என ஏற்பாடுசெய்யப்பட்ட குகன்மெட்ரிக் பள்ளி பேருந்து, மற்றும் வேனில் கருங்காலக்குடி நோக்கி புறப்பட்டோம்.
   இந்தமுறை அதிகமான புதியஆர்வலர்கள் கலந்துகொண்டதால் காலை 7 மணிக்கு புறப்பட்டோம்,  கருங்காலக்குடி ஊரின் மையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு பஞ்சபாண்டவர் மலை நோக்கிநடந்து சென்றோம், 150 பேர் மலையை நோக்கி வரிசையாக சென்றது ஏதோ ஊர்வலம் செல்வதுபோல் இருந்தது. ஊர்மக்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள்.
 ஏதோ சினிமா சூட்டிங்கா என சிலர் கேட்டது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது, ஊருக்கு கிழக்கு பக்கம் செல்லும் பாதையில் சிறிது தூரத்தில் பஞ்சபாண்டவர்  மலை உள்ளது, செல்லும் வழியில் மலையின் அடிவாரத்தில் குடிநீருக்காக வெட்டப்பட்டு சுவர்கட்டப்பட்ட ஊரணி மனதை கொள்ளைகொண்டது.


   பஞ்சபாண்டவர் மலையும் அதனை ஒட்டிசெல்லும் பாதையும் வார்த்தையால் வர்ணிக்கமுடியாத அளவு அழகு, அந்தவழியாக வந்த ஒரு முதியதம்பந்தியர்  எங்கள் ஊருக்கு வந்ததற்க்கு நின்று நன்றி கூறினர்.
   பஞ்சபாண்டவர் மலைநுழைவாயிலில் இரண்டு பனை மரம் அன்னாந்து பார்த்துகொண்டே மலைஏறினோம், சிறிது தூரம் மலைஏறியவுடன் சிறிய சமவெளி அதில் ஓர் பெரிய ஆழமரம், அதன் அருகில் ஓர் சமணர் குகை அந்த இடம் பார்த்தபோது பார்ப்பவர்கள்  கவிஞராகிவிடுவார்கள், அங்கிருந்து ஏறிவந்தபாதையை பார்த்தபோது, அன்னாந்து பார்த்த பனை மரத்தை  இப்போது குனிந்து பார்த்த நிலை,  அங்குள்ள பாறையில் ஆர்வலர்கள் அமர  அந்தமலையின் பெருமைகளையும் அங்குள்ள சமணர் படுக்கை மற்றும் சிற்பங்களை பற்றியும் முனைவர்.சாந்தலிங்கம் அய்யா அவர்கள் கூறினார்கள்.

     பாண்டிய நாட்டுக்கும் தலைநகரையும்,, சோழநாட்டு தலைநகரையும் இணைக்கும்  பெருவழிபாதையில் அமைந்த ஊர் கருங்காலக்குடி, இந்த மலையில் உள்ள கல்வெட்டுக்கல் கி.பி.10ம் நூற்றாண்டை சேர்ந்தவை, மதுரையை சுற்றியுள்ள மற்ற சமணர் மலைகளில் மகாவீரர் சிலை செதுக்கப்பட்டுள்ளது எனில் இங்கு சமணதுறவியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
     இந்த மலையின் குகைகளில் தொல்பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான  அடையாளமாக பல ஓவியங்கள் அந்த குகையில் காணப்படுகிறது.
     தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை  இந்த மலையை வரலாற்று சின்னமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. எனினும் பாதுகாப்புயற்ற நிலைதான் காணப்படுகிறது, இது போன்ற பகுதியில் தனிகுடும்பமாக வந்து கண்டுகளிக்க முடியாதநிலை ஏன் எனில் பாதுகாவலர்கள் யாரும்மில்லை, மக்கள் தொடர்ந்து  இது போன்ற பகுதிகளுக்கு  வந்து செல்லும் போதுதான் அரசின் கவனத்திற்கு வந்து அரசு பாதுகாப்புஏற்பாடுகளை செய்யும், அரசும் விடுமுறைகாலங்களில் பேருந்து வசதிகளை செய்து தந்தால் மக்களும் இது போன்ற இடங்களுக்கு வந்து செல்வார்கள். மதுரை மக்களுக்கும் இது போன்ற இடங்களை பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு வரும்.

  பசுமைநடை பற்றிய செய்திகள் உடனுக்குடன் தினகரன், தினமலர், ஹிந்து போன்ற நாளிதழில் வருகின்றது ஆனால் மதுரையை தாண்டி அந்த செய்திகள்  மக்களை அடைவதில்லை, டி,வி போன்ற மீடியாக்கள் தான் இது போன்ற செய்தியை கொண்டுசெல்லும் போது விழிப்புனர்வு வரும்.

      கீழ்பகுதியில் உள்ள குகையில் சமணப்படுக்கைகள் உள்ளதைபோல் மலையின் மேல் பகுதியில் குகைகளில் தான் தொல் பழங்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. அங்கு செல்ல சிறிது தூரத்திற்டு பாறையில் படிகள்  செதுக்கப்பட்டுள்ளது, மலை ஏறுவதற்கு எளிதாக இருந்தாலும் அதன்பின் கிழக்குபக்கம் செல்லும் பாதை வழியாக ஓவியம் உள்ள குகையை அடைய பாதை ஆபத்தானதாகவே இருக்கிறது, கவனம் தவறினால் 100 அடி பள்ளத்தில் விழுந்து விடுவோம். பசுமைநடை ஒருங்கினப்பாளர்கள் பாதையில் நின்று ஏறுபவர்கள் சிரமப்படாது  பாதுகாப்புதந்து ஏற்றிவிட்டனர்.
       

        குகையின் கிழக்குபக்கம்  நூறுபேர் அமரும் படியாக இயற்கையிலேயே சமவெளியாக இருந்தது,  ஆர்வலர்கள் அங்கு அமர்ந்தோம். குகைஓவியங்களை பற்றி ஓவியர் பாபு விளக்கிகூறினார்கள். அதன்பின் ஒருங்கினைப்பாளர் அ.முத்துகிருஷ்ணன் இந்த பசுமை நடை சிறப்பு பற்றியும், அடுத்த பசுமைநடை எங்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என எடுத்துகூறியபின்,
         பசுமைநடை ஆர்வலர்கள் உயரத்தில் இருந்து இயற்கையின் அழகை ரசித்தவாறு இறங்கினோம். வானம் மழைபெய்வதுபோல் மேகங்கள் திரண்டு குளுமையாக இருந்தது.
       இந்தியா முழுதும் சுற்றுபயணம் செய்துவரும் புகைபடவித்தகர் திரு. சுந்தரராசன் அவர்கள் மூன்றுநான்கு பசுமைநடைக்கு பின் தன் மகளுடன் கலந்துகொண்டார்கள், அவரது மகளும் நல்லபுகைபடநிபுணர் பல பரிசுகளும் பெற்று இருக்கிறார்கள். அந்த இடங்களின் அழகியலை கேமராவில் சுட்டுக்கொண்டிருந்தார்கள். அதேபோல் சில இடைவேளைக்கு பின் நண்பர் கவிஞர்.P.G.சரவணன் அவர்களும் வந்து இருந்தார்கள், கடந்த மாதம் வடநாட்டு மலைபகுதிகளுக்கு சுற்றுலா சென்று திரும்பும் வழியில் விபத்தால் வலதுகை முறிவு ஏற்பட்டு கைகட்டு போட்ட நிலையில் பசுமைநடையில் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுமல்லாமல், இடது கையால் அந்த இடங்களின் அழகை தன் கேமராவில் திருடிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது நெகிழ்வாக இருந்தது.
    


         வளைபதிவாளர்கள் இளஞ்செழியன்(கதிர்), சுந்தர் (சித்திரைவீதிக்காரன்) ,மற்றும் உடன்பணிபுரியும் தம்பி. பாலசுப்பிரமணி இவர்களுடன் அந்த இடத்தின் அழகை பகிர்ந்துகொண்டோம். சென்னையில் இருந்து முருகராஜ் தன் நண்பர்களுடன் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளித்தது.  
          
        ஒவ்வொருமுறை கலந்துகொள்ளும் போதும் புதுபுது அனுபலங்கள், அவை பசுமைநினைவுகளாய் மனதில் பதிவு செய்து கொண்டு வீடு திரும்பினோம். 

 பசுமை நடை ஒருங்கினைப்பு குழு உறுப்பினர்கள் உதயகுமார், ரகுநாத், இளஞ்செழியன், சுந்தர், மதுமலரன், போன்ற இளைஞர்கள் அ.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து பசுமை நடை சிறப்பாக வழிநடத்திசென்றதற்கு விருதுநகர் இலக்கியா வாசகர் வட்டம் சார்பாக வாழ்த்துக்கள்.

இதற்கு தொடர்புடைய அருமையான, விரிவான பதிவை காண ;    
                                                                          இளஞ்செழியன் 
                                                சுந்தர்-சித்திரவீதிகாரன்      ,
                                                             முருகராஜ்

கிரீன்வாக் 22 பற்றிய என் முந்தைய பதிவை காண :கீழவளவு பஞ்சபாண்டவர் மலை

9 கருத்துகள்:

 1. பசுமைநடை குறித்த பதிவுகளை வாசிக்கும் போது மீண்டும் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை அளிக்கிறது.
  கருங்காலக்குடி சென்றது போல மழைக்கால மேகம் அமையுமா என்றுதான் தெரியவில்லை. அருமையான பதிவு.
  இயற்கையை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்.

  பதிலளிநீக்கு
 2. தாத்தா,பாட்டியின் நிழற்படங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள். ஒவ்வொருவரின் எழுத்துகளிலும் பசுமை நடை மிளிர்கிறது... ரசனை துளிர்கிறது... ஒவ்வொரு பயணத்திலும் புது புது அனுபவங்கள். அழகாக பசுமை நடையை பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது போன்ற ஒரு இனிமையான
  அனுபவத்தினை எழுத்தின் மூலமாக எங்கள் மனதில் பதிய .செய்தமைக்கு நன்றி இது போன்ற எழுத்துக்கள் தான் மேலும் பயணம் செய்வதற்கு உந்துதலாக இருக்கிறது ...நன்றிகள் பல தொடரட்டும் இந்த பயணம் வாழ்த்துக்கள் ..

  பதிலளிநீக்கு
 4. கருத்துக்கள் எழுதி ஊற்சாகம் தரும் நண்பர்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. காட்சியும் அனுபவ பதிவும் மிக ,மிக அருமை..

  பதிலளிநீக்கு
 6. வணக்கம். தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_24.html

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கிளறிய அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 9. அண்ணே, கொஞ்சம்(இல்லை ரொம்பவே) தாமதமான பதிவு மன்னிக்கவும்.facebook வாயிலாக தற்போது இதை படிக்கவும் பகிரவும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி.உங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமை.இதை எழுதிய உங்களுக்கு இருக்கும் மன மகிழ்வைவிட எனக்கு ரொம்ப ரொம்ப அதிகம். காரணம் இந்த மலைக்கு அருகில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நான் படித்தேன்.அப்போது பள்ளியை கட்டடிக்கும் நேரத்திலெல்லாம் எனக்கும் என் நண்பர்களுக்கும் ஏன் பள்ளியில் பெரும்பாலான மாணவர்களுக்கும் இந்த மலைதான் உல்லாசபுரி,சுற்றுலாதலம்,விளையாட்டு மைதானம் எல்லாம்.இந்த மலையில் எங்கள் காலடி படாத இடமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.இங்கேயே சமைத்து சாப்பிட்டிருக்கிறோம்,தென்றலை தாலாட்ட சொல்லி பாடபுத்தகங்களை தலைக்கு வைத்து காலாட்டியபடியே தூங்கியிருக்கிறோம்,குகைகளுக்குள் ஒளிந்து விளையாடியிருக்கிறோம்,பரீட்சை நேரங்களில் விழுந்து விழுந்து படித்திருக்கிறோம்,தாவரவியல் பாடத்திற்காக ஒரு சில தாவரங்களை இந்த மலையில் தேடிப்பிடித்து பயனடைந்திருக்கிறோம்.ஆனால் அப்போதெல்லாம் விளையாட்டுத்தனமாக தெரிந்த இந்த மலையை மாபெரும் வரலாறாக,தமிழ்க்குடியின் தடயமாக,சரித்திரத்தின் சான்றாக என் கண்முன்னே கொண்டுவந்ததற்கு என் இதயம் கனிந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
  இதில் இன்னொரு தகவல் (உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை),அந்த அச்சனந்தி சிலைக்கு அருகில் இருட்டான அறை போன்ற குகை இருக்கும்.அங்கேதான் நீங்கள் கூறிய படுக்கை,கிண்ணம் போன்ற குழி,கால்தடம் எல்லாம் இருக்கும்.அதன் அருகே ஒரு பெரிய பாறை போன்ற கூரான கல் ஒன்று உண்டு,அதில் ஒரு சிறிய கல்லை கையில் வைத்து தட்டினால் ஏதோ இசை கருவியிலிருந்து வரும் சத்தம் போல் இருவேறு விதமான சத்தம் வரும்.(அதை இசைத்து மகிழ்ந்திருக்க்றோம்.)
  ungal photos-ku oru salute.
  இப்படிக்கு வஞ்சி.க.தங்கமணி.

  பதிலளிநீக்கு