சிறுகதைகள் வாரபத்திரிக்கைகளில் இரண்டு,ஒன்று எனபக்கங்களாய் சுருங்கி பின் அரைபக்க கதையாக மாறி இப்போது காணாமல் போய் விட்டது,ஆனால் மாதபத்திரிக்கையில் குறிப்பாக உயிர்எழுத்து இதழில் அதிக சிறுகதைகள் வெளிவருவது மகிழ்வை தருகிறது, இலக்கிய உலகில் முன்னனி படைப்பாளர்களின் கதைகளும், புதிய எழுத்தாளர்களின் படைப்புகளும் வருகிறது. மே மாத உயிர்எழுத்தில் எஸ்.அர்ஷியா எழுதிய "சுற்றிச்சுழலும் தட்டை பாம்புகளும் புளிபோடாத உளுவைமீன் குழம்பும்" சிறுகதை மிகமிக நல்லபடைப்பாக வந்துள்ளது.
பள்ளிவாசலில் ஆரம்பிக்கும் கதை பள்ளிவாசலில் முடிவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தந்தையின் பாசம்,பிரிந்துசென்ற மகளின் நினைவுகளின் வலிகள் கதையாக்கப்பட்டுள்ளது.
ஜீம்ஆவில் 'பயான்' செய்து கொண்டிருக்கும் ஹஜ்ரத் பேச்சு பற்றிய வர்ணனைகளும், பேச்சை கேட்கும் மனிதர்களை பற்றியும், சுற்றுபுற நிலையை பற்றிய அருமையான வர்ணனைகளுடன் கதை தொடங்குகிறது, பாசமாக வளர்த்த பெண் காதலித்து ஒடிபோய் விட்டாள் அந்த பெண்ணின் தந்தைக்கு ஏற்படும் வலிகள் உண்மையாகவே இப்படி தான் இருக்கும் என்பதொ உணரும் விதமாக கதைவடிக்கப்பட்டுள்ளது. மகள் வேறுமதத்தை சேர்ந்தவருடன் ஓடிப்போய் விட்டால் அந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல அந்த பெண் சார்ந்த மதத்திற்கே ஒரு அவமானமாக கருதப்படுவதும், அனைவரும் கூடி என்ன செய்யலாம் என கூடி ஆலோசிப்பதும் ஒரு பெரிய பிரச்சனையாக மாற போகும் போது என் மகள் செத்துவிட்டதாக ஜமாத்தில் அறிவித்து விடுங்கள் என முற்றுபுள்ளி வைப்பது, நாட்டில் எந்த ஒரு ஆணும் வேறு ஜாதி,மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டால் ஆண் சார்ந்த ஜாதியில்,மதத்தில் பிரச்சணையாக பார்ப்பதில்லை,அது சமயம் ஒருபெண் சார்ந்த ஜாதியிலோ,மதத்திலோ ஏற்பட்ட அவமானமாக கருதப்பட்டு வெட்டுகுத்து,கொலை என முடிந்து அந்த பெண்ணின் வாழ்க்கையை முடக்கிபோடும் சமுதாயபிரச்சனையை இந்த கதையில் உணர்த்தியுள்ளாதாக தெரிகிறது.
எட்டுவருடங்களாகியும் அடுத்த தெருவில் வசித்துவரும் தன்மகளுடன் பேசவோ பார்க்கவோ விருப்பாத ஒருதந்தை, மசூதியில் பயான் செய்துகொண்டு இருக்கும் தாயம்கானின் பெண்சாயலும் அவரது உடல்மொழியும் தன் பெண் சாயலில் இருப்பது போலவே உணருகிறார் அப்படி எனில் வெளியே பெண்ணை வெறுத்தாலும் அவளது நிணைவுடன் வாழ்ந்து வரும் தந்தையை நம் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
தன் மகள் விபத்தில் சிக்கி சவக்கிடங்கில் கிடத்தப்பட்டு இருக்கும் போது அங்கு நடக்கும் சம்பவம் தந்தையின் உணர்வையும்,தன்மகளின் கணவனின் மேன்மையான குணத்தையும் நமக்கு எடுத்துகாட்டும் விதமும் தன் மகளை இரண்டுகையாலும் தூக்கிகொண்டு நடக்கும் போது நாமும் அவர் பின்னே நடப்பது போன்ற உணர்வை தருகிறது, ஆனால் கதையின்முடிவு யாரும் கற்பனை செய்துபார்காத வகையில் முடித்துள்ளார்.
சிறந்த கதைகளை வெளியிடும் உயிர்எழுத்து இதழை தொடர்ந்து படிப்போம்.

உயிர்எழுத்து மிகவும் அருமையான சிற்றிதழ். சிறுகதை, கவிதைகளை அதிகம் வெளியிடும் சிற்றிதழ். அர்ஷியாவின் கதை குறித்த நல்ல அறிமுகம். பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்குஅர்ஷியாவின் வலைதள முகவரி
http://s-arshiya.blogspot.com/
சித்திரைகாரருக்கு வணக்கம் தங்கள் கருத்துக்கு நன்றி
பதிலளிநீக்குஅர்ஷியா எழுதிய ஏழரைப்பங்காளி நாவல் மதுரைவாழ் முஸ்லிம்களின் கதை படித்துபாருங்களேன்
பதிலளிநீக்கு