மஞ்சள்காமாலை நோய்க்கு எந்த மருந்துவம் சிறந்தது
நாட்டு மருத்துவம் என சொல்லப்படும் பரம்பரை வைத்தியமே சிறந்தது
என் மகளுக்கு மஞ்சகாமாலை வந்து அலோபதி வைத்தியம் பார்த்தும் குணமாகாத நிலையில் ’பாபநாசம்’ சென்று நாட்டுமருந்து தந்த பின்னரே நோய் குணமானது,
என் அனுபவம் மற்றவர்களுக்கு பயன்படவேண்டும் என்ற நோக்கில் எழுதியுள்ளேன்.
என் மளுக்கு இரண்டு தினங்களாக காய்ச்சல் குறையாததால் வீட்டுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கூட்டிசென்றேன், அவர்கள் இரத்தபரிசோதனை செய்து பார்த்துவிட்டு மஞ்சள்காமாலை நோய் மற்றும் வைரஸ் தொற்று உள்ளது, என கூறி ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்த்து வைத்தியம் பார்க்கப்பட்டது,
21.9.13 அன்று சேர்த்து தொடர்ந்து டிரிப் ஏற்றினர், டிரிப் ஏற்றுவதற்க்கு முன் வாந்தி இல்லாமல் இருந்தது ஏற்ற ஆரம்பித்தபின் ஒறு மடக்கு தண்ணீர் குடித்தால் ஒரு டம்பளர் அளவு வாந்தி எடுத்தால், அடுத்த இரண்டு தினம் வாந்தி நிற்கவே இல்லை, மதுரையில் இருந்து திங்கள் கிழமை அந்த மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் வருவார் அவர் வந்து பார்த்தபின் மருந்து மாற்றி தந்தனர் அதன் பின் வாந்தி நின்றது.
21.9.13 அன்று Billirubin அளவு .........1.8 mg
22.9.13 அன்று Billirubin அளவு ........2.8 mg
24.9.13 அன்று Billirubin அளவு .......2.6 mg
26.9.13 அன்று Billirubin அளவு ........7.7 mg
1.8 இருக்கும் போது ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை எடுத்துகொண்டு இருக்கும் போதே மஞ்சள்காமாலை அதிகமாகிகொண்டு உள்ளது என் மருத்துவரிடம் கேட்டபோது அளவு கூடிதான் இறங்கும் என கூறிவிட்டனர்.
26.9.13 அன்று ஸ்கேன் எடுக்க கூறினார்கள், அதற்குள் உறவினர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிசெல்வோம் என்றதால், சாத்தூரில் ஸ்கேன் வச்திஉள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தோம், அங்கு ஸ்கேன் பார்த்து பித்தபை வீங்கியுள்ளதால் Billirubin அளவு .கூடியுள்ளது என கூறி மீண்டும் இரத்தம் எடுத்து முழுமையாக ஆய்வு செய்தனர் ,27.9.13 அன்று Billirubin அளவு .7.6
மீண்டும் டிரிப் ஏற்றினர் மருந்து ஊசிமூலம் ஏற்றப்பட்டது, 5 தினம் கழித்து 30.9.13 அன்று டிச்சார்ச் செய்துவிட்டு மூன்றுதினம் ஊசி போடவேண்டும் என கூறியதால்,
ஏற்கனவே சிகிச்சை எடுத்த ஆஸ்பத்திரியில் சென்று ஊசி போட்டோம்,
2.10.13 அன்று 5 நாளும்Billirubin அளவு .பார்க்கவில்லையா என சபதம் போட்டுவிட்டு இரத்தபரிசோதனை பார்த்தனர் அன்று Billirubin அளவு .11.7 mg என வந்தவுடன் மருத்துவர் மதுரை சென்று ஸ்பெசலிஸ்ட்டிடம் காண்பிக்க கூறினார்கள்.
வீடுக்கு பக்கத்தில் உள்ளவர்கள் மஞ்சல்காமாலை எனில் நாட்டு மருந்துதான் சிறந்தது எனவே பாபநாசம் கூட்டி செல்லுங்கள் எனறனர், பலரும் இப்படி கூற 3.10.1013. அன்று பாபநாசம் சென்றோம் , பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி அருகில் ஒரு வீட்டில் மஞ்சள்காமாலை நோய்க்கு மட்டும் மருந்து தருகின்றனர், நாங்கள் சென்ற சமயம் 20 பேர் வந்து காத்துயிருந்தனர்,
ஏற்கனவே பாபநாசம் அருகில் காரையாலில் ஒரு பாட்டி மருந்து தர உடல் நலம் சரியில்லாததால் பாபநாசம் வந்துவிட்டனர், பாட்டி இறந்துபோனதால் பேத்தி தற்போது மருந்து தந்தனர், நாடி பார்த்து அதிகமாக தான் உள்ளது, என்றனர், அளவு பார்த்தீர்களா என கேட்க ரிப்போட்டை காண்பித்தோம்,
ஒரு வேளை மருந்து வாயில் ஊற்றிவிட்டு நான்கு வேளை மருந்து கொடுத்து அனுப்புகின்றனர், மூன்று நாள் உப்பில்லாத பத்திய சாப்பாடு அதன் பின் 21 நாட்கள் எண்னை இல்லாமல், சாப்பாடு என அவர்கள் கூறியபடி சாபிட்டு வர மஞ்சளாக இருந்த கண் சிறிதுசிறிதாக நிறம் மாறி சாதாரணமாக மாறியது..
21 நாள் கழித்து ஆய்வு செய்தபோது 24.10.13அன்று Billirubin அளவு . 1.2 என வந்தது. 40 தினம் எண்னை சேர்க்காமல் சாப்பிட அதன் பின் எப்போதும் சாப்பிடுவதைபோல் சாப்பிடலாம்.
பாபநாசம் சென்றபோது பலரும் ஆஸ்பத்திரியில் காண்பித்தும் குணம் கிடைக்காமல் அங்கு வந்து மருந்து வாங்கி சாப்பிடுகின்றனர்.
எது சிறந்த மருத்துவம் என கூறவரவில்லை நாட்டுமருந்தில் குணமானதை பதிவு செய்திள்ளேன்..
பாபநாசம் மருத்தவமனை நோட்டீஸ் |
தங்கள் கருத்துடன் முழுவதும் உடன்படுகிறேன். இதே போன்ற நிகழ்வு எனக்கும் நிகழ்ந்துள்ளது
பதிலளிநீக்குமஞ்சள் காமாலை மட்டுமல்ல அனைத்து நோய்களுக்கும் மூலிகை சிகிச்சை மட்டுமே சிறந்தது
பதிலளிநீக்குAddress soiluga friends
பதிலளிநீக்குAddress soiluga friends
பதிலளிநீக்குAddress soiluga friends
பதிலளிநீக்குAddress soiluga friends
பதிலளிநீக்குதிருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியில் வாய்க்கால் பாலம் என்ற இடத்தில் மஞ்சள்காமாலைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உண்மையா?
பதிலளிநீக்குCancer Ku nadumarunthu irukutha nanpa
பதிலளிநீக்கு