செவ்வாய், அக்டோபர் 04, 2016

சதுரகிரிபயணம்

சுந்தரமகாலிங்கம்
செப்டம்பர் 29 ம்தேதி சதுரகிரி பயணம். மலையில் பாதைகள் சரி செய்து பக்தர்கள் சிரமம்மின்றி மலை ஏற பாதைகள் சீர்படுத்தி வருகின்றனர். மலை ஏறுவதை விட. இறங்கும் போதுதான் கால்வலியும் பாதையில் வழுக்கி விழும் அபாயமும் இருக்கிறது...

சனி, செப்டம்பர் 03, 2016

61 வது பசுமைநடை

பசுமைநடை இந்தமுறை கொங்கர்புளியங்குளம் சமணர் மலை நோக்கி...
ஏற்கனவே இரண்டு முறை இந்தமலைக்கு சென்றுயுள்ளோம்.
இந்தமுறை சென்றபோது மலை அடிவாரம் முழுவதும் முள்செடிகள் மலையில் ஏறுவதே சிரமமாக இருந்தது.
மலையில் உள்ள சின்னங்களில் பெயின்டால் தங்கள் பெயரை எழுதிவைத்துள்ளனர்.
படுக்கைகளில் கூட தங்கள் பெயரை உளியால் செதுக்கியுள்ளனர்...
இருந்தாலும் இயற்கையான குகை அமைப்பு குகையின் உள்ளே அவ்வளவு குளிர்ச்சி ஐம்பதுபேர் தாராளமாக அமரலாம்...
அங்கிருந்து செக்காரணூரணி மற்றும் முத்துபட்டிமலை என இயற்கையை ரசிக்க ஆயிரம் கண்வேண்டும்.
அந்த இடங்களின் வரலாற்றை தொல்லியல் பேயாசிரியர் கண்ணன் அவர்கள் விளக்கினார்கள்.....